
நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாகவே தனது திரைப்படங்களை பண்டிகை நாட்களில் வெளியிடுவதை சென்டிமென்டாக கொண்டுள்ளார். அதிலும் தீபவாளி, பொங்கல் சமயங்களில் தனது படங்களை வெளியிட அஜித் முன்னுரிமை கொடுத்து வருகிறார். விஸ்வாசம் படம் அறிவிக்கப்பட்டபோதே தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் படத்தின் படப்பிடிப்பு துவங்க தாமதம் ஆனதால் தீபாவளிக்கு விஸ்வாசம் படத்தை வெளியிட முடியவில்லை. இதனால் பொங்கல் விருந்தாக விஸ்வாசம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதால் அஜித் தனது ஓடும்பத்துடன் ஓய்வெடுக்க கோவா சென்றுவிட்டார். இந்த நிலையில் திடீரென பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
ஏற்கனவே பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பேட்ட படமும் வெளியாகும் என்கிற அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்களையும், விநியோகஸ்தர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இரண்டு பெரிய ஹீரோக்களின் படம் ஒரே நேரத்தில் வெளியானால் இரண்டு பேரின் படங்களின் வசூலும் பாதிக்கப்படும் என்று திரையுலக ஜாம்பவான்கள் கருதுகின்றனர்.
இதனால் பேட்ட படத்தின் வெளியீட்டை ஒத்திப்போடுமாறு சன் பிக்சர்ஸ் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது- ஆனால் பொங்கலுக்கு ரஜினி படம் வெளியாகும் என்கிற அறிவிப்பில் மாற்றம் இல்லை என்று சன் பிக்சர்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால் பேட்ட – விஸ்வாசம் மோதலை தவிர்க்க முடியாது என்கிற சூழலில் சில மூத்த விநியோகஸ்தர்கள் விஸ்வாசம் தயாரிப்பாளரிடம் பேசியுள்ளனர்.
டிசம்பர் மாதம் பள்ளி அரையாண்டு விடுமுறை உள்ளது மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வீக்கென்ட் இருக்கிறது. அந்த சமயத்தில் விஸ்வாசம் படத்தை வெளியிட்டால் வசூலில் பாதிப்பு இருக்காது என்று தயாரிப்பாளரிடம் கூற அதற்கு அவர் அஜித்திடம் பேசுவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து டிசம்பர் 21ந் தேதி வெளியானால் அடுத்த பத்து நாட்கள் விடுமுறை என்பதால் வசூலை அள்ளிவிடலாம் என அஜித்திடம் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
ரசிகர்களுக்கு எது நல்லதோ அதை செய்யுங்கள் தனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அஜித் தயாரிப்பாளரிடம் கூறிவிட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து டிசம்பர் 21ந் தேதி விஸ்வாசம் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.