சீசன் 2-வை தாங்குமாப்பே தனுஷ் ஒடம்பு... அளவில்லாமல் போகும் அரசியல் அட்ராசிட்டி!

By vinoth kumarFirst Published Nov 20, 2018, 11:39 AM IST
Highlights

சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் தான் நடிகர் தனுஷ்! என்று மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மீண்டும் ஒரு புதிய மனுவை மதுரை ஜூடிஷியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். (மறுபடியும் கதிரேசன் - மீனாட்சி தொடர் மொதல்ல இருந்தா? இந்த சீசன் -2 வை தாங்குமாப்பே தனுஷோட பிஞ்சு ஒடம்பு?)

* நடிகர்களின் பின்னால் செல்வதற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை! என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். (தல, இதை நீங்க அம்மம்ம்மா! இருந்த காலத்துலேயே தில்லா, நல்லா, நீட்டி முழக்கி சொல்லியிருந்தீங்கன்னா நீங்க பிஸ்த்து!)

*  உப்பைப் போல தூய்மையானவர்களுக்குதான் கட்சியில் பொறுப்பு அளிக்கிறோம். கட்சி மட்டுமல்ல, தூய்மையான சாமானியர்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி. பொறுப்புகளை அளித்து சரித்திரம் படைத்த இயக்கம்தான் அ.தி.மு.க! என்று மாஜி அமைச்சர் வைகை செல்வன் கூறியுள்ளார். (இதை அப்படியே தஞ்சாவூர் கோயில்ல கல்வெட்டா வெட்டி வெச்சுட்டு, பக்கத்துலேயே ஒரு ஸ்டூல் போட்டு உட்கார்ந்துக்குங்க தலீவரே. பின்னாடி வரக்கூடிய சந்ததிகள், அந்த கல்லை வெட்டுனது நீங்கதான்னு நினைச்சு புல்லரிச்சு புளங்காகிதமடையட்டும்.)

* சிவன் - பார்வதி போல, எங்க அப்பா- அம்மா போல வாழுங்க!ன்னு புது மண தம்பதிகளை வாழ்த்தினார் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.
(சத்திய சோதனைடா சரவணா! பத்தாங்கிளாஸே முடிக்காதவன் பி.ஹெச்.டி. கைடு ஆன மாதிரி, கன்னிப்பையன் பிரபாவை இப்படி வாழ்த்த வுட்டுருக்கீங்களே! உங்க அட்ராசிட்டி அரசியலுக்கு ஒரு அளவேயில்லையா?)

* சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் தான் நடிகர் தனுஷ்! என்று மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மீண்டும் ஒரு புதிய மனுவை மதுரை ஜூடிஷியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். (மறுபடியும் கதிரேசன் - மீனாட்சி தொடர் மொதல்ல இருந்தா? இந்த சீசன் -2 வை தாங்குமாப்பே தனுஷோட பிஞ்சு ஒடம்பு?) 

* அறிவாலய வளாகத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் , தேசத்தின் பல கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து உட்கார வைத்து, அதையே நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார மேடையாக மாற்றிடும் எண்ணம் ஸ்டாலினிடம் உள்ளது. (எதையுமே பிளான் பண்ணி செய்யுற உங்க ஓப்பனிங்கெல்லாம் நல்லாதான் இருக்குது தலைவரே! ஆனா ஃபினிஷிங்தான் பிசுபிசுத்துப் போவுது)

click me!