ரஜினி மகளின் ரெண்டாவது கல்யாணத்தில் கைவைத்த அந்த கோவக்காரர்... உடைபடும் உச்சம் வீட்டு ரகசியம்!!!

Published : Nov 20, 2018, 11:06 AM IST
ரஜினி மகளின் ரெண்டாவது கல்யாணத்தில் கைவைத்த அந்த கோவக்காரர்... உடைபடும் உச்சம் வீட்டு ரகசியம்!!!

சுருக்கம்

கோபக்கார ஸ்ட்ரிக்ட் மனிதரான சிவகுமாரிடம் பொறுப்பை அப்பா ரஜினி ஒப்படைத்ததால், ஃபைனல் சிக்னல் வரும் வரையில் செளந்தர்யா செம்ம டென்ஷனிலேயே இருந்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் வீட்டுக்குள் உள்ளார்ந்த மகிழ்ச்சி நிலவுகிறது. காரணம்? அவரது இரண்டாவது மகள் செளந்தர்யா மீண்டும் மண வாழ்க்கைக்குள் நுழைய இருப்பதுதான். 

பெரும் தொழிலதிபர் வீட்டு மகனான அஸ்வினை, செளந்தர்யா ரஜினிகாந்த் காதலித்து திருமணம் செய்தார். ஏக படாடோபமாக நடந்த இந்த திருமணம் சில வருடங்களிலேயே விவாகரத்தில் வந்து நின்றது. ஆசையை கொட்டி வளர்த்த கடைக்குட்டி மகளின் கல்யாண வாழ்க்கை இப்படி கசந்ததில் ரஜினிக்கு ஏக மன கஷ்டம். இடையில் அவரது தடுமாற்றங்கள், கோபங்கள், தவறான சினிமா முடிவுகளுக்கெல்லாம் இதுவும் ஒரு காரணம்.

 

இந்த நிலையில் விவாகரத்தான செளந்தர்யாவின் பர்ஷனல் வாழ்க்கையை பற்றி இணையவெளிகளில் வெளி வந்த பதிவுகள் ரஜினியை மேலும் துவள செய்தன. ’என்ன உலகம்டா இது? என்ன மனுஷங்கடா இவங்க? நரம்பில்லாத நாக்கு எப்படியெல்லாம் பேசுது?’ என்று பொங்கிவிட்டார் ரஜினி. இதனால் செளந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தே ஆவது எனும் மனநிலைக்கு வந்தார். 

இந்த நிலையில்தான் சென்னையை சேர்ந்த பெரும் மருந்து நிறுவன உரிமையாளர் வணங்காமுடியின் மகன் விசாகனை, செளந்தர்யா காதலிக்கும் விஷயம் அவரது காதில் விழுந்தது. ஒரு வகையில் சந்தோஷம்தான் என்றாலும் ரஜினிக்குள் ஒரு பயம் இருந்தது. மகளே முடிவு செய்த முதல் திருமண வாழ்க்கை போல் இந்த திருமணமும் தப்பாக முடிந்து விட கூடாதே என்பதுதான். இதனால் பையன் வீட்டின் பின்புலத்தை ஆராய்ந்தார் ரஜினி. பண விஷயத்தில் மிகப்பெரிய குடும்பம் என்பதை புரிந்து கொண்டாலும், அதனால் மட்டும் அவர் சம்மதித்து விடவில்லை. அதைத்தாண்டி பையன் குடும்பத்தின் பூர்வீகத்தை அலசியபோது அவர்கள் கோயமுத்தூர் மாவட்டம் சூலூரை அடிப்படையாக கொண்டவர்கள் என்பது ரஜினிக்கு புரிந்தது.

 

கோயமுத்தூரில் மிக மிக முக்கியமான மனிதர்கள் வட்டாரத்தில் ரஜினிக்கு பெரும் செல்வாக்கு உள்ளது. ஆனால் அவர்கள் மூலம் இந்த விஷயத்தை டீல் செய்யாத ரஜினி, நேரடியாக போன் போட்டது ஒரு நடிகருக்குதான். அவர் யார் தெரியுமா? சீனியர் நடிகரான சிவகுமாருக்குதான். காரணம்...? சிவகுமாரின் சொந்த ஊர், விசாகன் குடும்பத்தின் சொந்த ஊரான சூலூரிலிருந்து சில கிலோமீட்டர்களே தொலைவில் இருக்கும் காசிக்கவுண்டன் புதூர்தான். இப்பவும் வருடத்துக்கு பல முறை சிவகுமார் தன் சொந்த ஊருக்கு, குடும்பத்துடன் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

 

எல்லா விஷயங்களிலும் நேர்மை, துல்லியத்தை எதிர்பார்க்கும் சிவகுமாரிடம் சொன்னால்தான் சரியான தகவல் கிடைக்கும் என்பது ரஜினியின் எண்ணம். அதனால் சிவகுமாரிடம் விஷயத்தை அவர் சொல்ல, ‘நான் விசாரிச்சுட்டு முழு விபரமும் சொல்றேன். வெயிட்’ என்றாராம் அவர். விசாகனின் அப்பா வணங்காமுடியின் அண்ணன் பொன்முடி தி.மு.க.வின் வி.ஐ.பி. சில வருடங்களுக்கு முன் சூலூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த இவருக்கு அந்த மாவட்டம் முழுக்கவே பெரும் செல்வாக்கு இருக்கிறது. இது சிவகுமாருக்கு நன்கு தெரியும். 

இதை ரஜினியிடம் தெளிவாக சொல்லிய சிவகுமார் வணங்காமுடி குடும்பத்தின் உள் விஷயங்களையும் தன் உறவினர்கள் மூலம் தெளிவாக விசாரித்தார். பாஸிடீவ் தகவல்களே கிடைத்தனவாம். இதை அப்படியே ரஜினியிடம் பகிர்ந்திருக்கிறார் சிவகுமார். அவரும் ஹேப்பியாக, விறுவிறுவென நிச்சயதார்த்தத்தை நோக்கி நகர ஆரம்பித்ததாம் விஷயங்கள். இந்நிலையில், கோபக்கார ஸ்ட்ரிக்ட் மனிதரான சிவகுமாரிடம் பொறுப்பை அப்பா ரஜினி ஒப்படைத்ததால், ஃபைனல் சிக்னல் வரும் வரையில் செளந்தர்யா செம்ம டென்ஷனிலேயே இருந்திருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!