‘செக்ஸ் டார்ச்சர் சினிமாவுல மட்டும்தான் இருக்கா?’ மோக’ன் லாலின் சமாளிஃபிகேஷன்

By vinoth kumarFirst Published Nov 20, 2018, 9:57 AM IST
Highlights

சமீப காலத்தில் ‘மி டூ’ புகார் குறித்து வாயைத் திறக்கும் அத்தனை நடிகைகளின் புகார்களிலும் மெயின் வில்லனாக சித்தரிக்கப்பட்ட மோகன்லால் ஒருவழியாக, ‘அவர்கள் எல்லாம் உள்நோக்கத்தோடு பேசுகிறார்கள்’ என்று பதில் கொடுத்திருக்கிறார்.

கேரள நடிகர் சங்கத்தலைவரான மோகன்லால் துவக்கத்திலிருந்தே மலையாள நடிகைகளின் ‘மிடூ’ புகார்களைக் கண்டுகொள்ளாமல் இருந்ததோடு, அப்புகார்களில் ஈடுபடும் நடிககளுக்கு புதிய படங்கள் எதுவும் கிடைத்துவிடாதபடி குறுக்கே விழுந்து படுத்துத்தடுத்தார் என்ற குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன.

இந்நிலையில் நேற்று கேரளாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மோகன்லால், ‘கேரள திரையுலகில் செக்ஸ் டார்ச்சர் என்பது  யாருக்கும் கிடையாது. நடிகைகள் ஆளாளுக்கு ஒரு கதை விடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில்  மீ டூ-வை இயக்கமாக யாரும் நினைக்கூடாது. 

அது மிகவும் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. இப்போதெல்லாம் நாடு முழுக்கவே  பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் தெரிவிப்பது ஃபேஷனாகி விட்டது. பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்கள் சினிமாவில் மட்டுமா இருக்கிறது. இது நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளிலும் தானே உள்ளது’ என்று எதிர்க்கேள்வி எழுப்பியதோடு பேட்டியை முடித்துக்கொண்டார்.

click me!