
நடுராத்திரியில் நடிகை வீட்டின் சுவர் ஏறிக்குதிப்பார். பட்டப்பகலில் நட்ட நடுரோட்டில் அதுவும் கவர்மெண்ட் ஜீப்பில் சரக்கடிப்பார். ஆனா தமிழ்நாட்டுக்கு வருங்கால சி.எம். ஆக ஆசைப்படுவார்’ என்று விஷாலை நெட்டிசன்கள் இன்று காலைமுதலே கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
முதல் சம்பவம் குறித்து இதுவரை விஷால் இன்னும் வாயைத் திறக்காத நிலையில் இரண்டாவது சம்பவம் நடந்திருப்பது ஐயோ பாவம் ‘அயோக்யா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக. இன்று வெளியான ‘அயோக்யா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் போலீஸ் ஜீப் ஒன்றின் மீது தெனாவட்டாக ஃபுல் பாட்டிலுடன் ராவாக அமர்ந்திருக்கிறார்.
இதைச் சகித்துக்கொள்ளமுடியாத சில புண்ணியவான்கள், விஷால் ஏதோ இந்த ஃபுல் பாட்டிலை ராவாகக் குடித்துவிட்டு இன்று ராவில் அதே நடிகை வீட்டுச் சுவரேறிக் குதிக்கப்போவது போலவே குதிக்கிறார்கள். அத்தோடு நில்லாமல்...தமிழ்நாட்டின் வருங்கால முதல்வராக ஆசைப்படும் விஷால் இப்படி பொறுப்பில்லாமல் போஸ் கொடுக்கலாமா? இதைக் கண்டு அன்புமணி ராமதாஸ் பொங்கி எழவேண்டாமா?? என்று ஆதங்கக் குரல்கள் வேறு.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ‘டெம்பர்’ என்ற படத்தின் ரீ மேக் தான் இந்த ‘அயோக்யா’. ஒரு பொறுக்கி போலீஸ் எப்படி பொறுப்பான போலீஸாக மாறி எதிரிகளின் பருப்பை எடுக்கிறான் என்பதுதான் படத்தின் ஒன்லைன். கதை இப்படியிருக்க, இப்படத்திற்கு காவி வேஷ்டி கட்டிக்கொண்டு வெண்பொங்கல் சாப்பிட்டபடியா ஃபர்ஸ்ட் லுக் வெளியிடமுடியும்? என்று கொதிக்கிறது விஷால் கோஷ்டி. மீரு நியாயமே செப்பிஸ்தாரண்டி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.