RRR movie : ரிலீசுக்கு முன்பே பாகுபலி சாதனையை அடிச்சுதூக்கி கெத்து காட்டும் ‘ஆர்.ஆர்.ஆர்’

By Asianet Tamil cinema  |  First Published Mar 24, 2022, 9:25 AM IST

RRR movie : சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளார் ராஜமவுலி. 


ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்டம் ஆர்.ஆர்.ஆர்

மாவீரா, நான் ஈ, பாகுபலி என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களை இயக்கி இந்திய சினிமாவை உலகத்தரத்துக்கு உயர்த்தியவர் ராஜமவுலி. இவர் இயக்கத்த்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளார் ராஜமவுலி. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகை ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை ஒலிவியா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பாகுபலி 2 சாதனை முறியடிப்பு

இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார். சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகி உள்ளது. கடந்தாண்டே ரிலீசாக இருந்த இப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப்போனது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இப்படம் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. அதன்படி இப்படம் நாளை உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், இப்படம் ரிலீசுக்கு முன்பே பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. அதன்படி அமெரிக்காவில் முன்பதிவில் அதிக வசூல் ஈட்டிய படமாக பாகுபலி 2 இருந்த நிலையில், தற்போது அதனை ஆர்.ஆர்.ஆர் படம் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. இப்படம் முன்பதிவில் மட்டும் 2.4 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Losliya : மெல்லிய இடையை இறுக்கி பிடித்திருக்கும் சேலையில்... பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் லாஸ்லியா

click me!