
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிராமிய மனம் கமழும் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்கள் ராஜலட்சுமி மற்றும் அவருடைய கணவர் செந்தில் கணேஷ்.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் சாண்டியின் இதுவரை பார்த்திடாத ரேர் போட்டோஸ்..!
மாடர்ன் இசையை கேட்டு ரசிப்பவர்கள் கூட இந்த தம்பதிகளின் தேன் குரலுக்கும், இவர்கள் பாடும் பாடலுக்கும் அடிமையாகி விட்டனர்.
சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, இசை மீது உள்ள ஆர்வதால் கிராமிய இசையை தேர்வு செய்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர்களை உலகமறிய செய்தது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என கூறலாம்.
மேலும் செய்திகள்:காதலன் பிறந்தநாளுக்கு நயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..! திக்குமுக்காடி போன விக்னேஷ் சிவன்!
தற்போது இந்த தம்பதிகள், வெள்ளித்திரை பாடல்கள் பாடுவதிலும், வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரிகள் செய்வதிலும் படு பிசியாக உள்ளனர். இவர்கள் பாடும் பாடங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், தற்போது சூப்பர் சூப்பர் நடுவர்கள் வாய் திறக்கும் அளவிற்கு படு மாடர்னாக மாறி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ராஜலட்சுமியை நடுவில் அமர வைத்து கொண்டு, சாய் சரண் மற்றும் செந்தில் கணேஷ் இருவரும் மாறி மாறி தங்களுடைய பாடல் திறமையை வெளிப்படுத்தும் வீடியோவில், சாய் சரண் ராஜலட்சுமியிடம் புரோபோஸ் பண்ண போவதாகவே கணவர் முன்பே கூறியுள்ளார்.
அந்த புரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.