
கடந்த மாதம் விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக்கூறியதால் சி.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா என கேட்டதாக திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது. இந்தியை கட்டாயமாக திணிக்க முயற்சிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். சோசியல் மீடியாவிலும் இந்தி திணிப்பிற்கு எதிரான கருத்துக்கள் தீயாய் பரவின.
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் நடிகர் சிரிஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. அதில் யுவன் அணிந்திருந்த டி-ஷட்டில் "I am a தமிழ் பேசும் indian" என்றும், சிரிஷின் டி-சர்ட்டில் "இந்தி தெரியாது போடா" என்ற வாசமும் இடம் பெற்றிருந்தது. நடிகர் சாந்தனு அவரது மனைவியுடனும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சகோதரனுடன் “இந்தி தெரியாது போடா” என்ற வாசகத்துடன் டி-ஷர்ட்டை அணிந்தபடி போட்டோ வெளியிட்டனர். இதையடுத்து #ஹிந்திதெரியாதுபோடா என்ற ஹேஷ்டேக்கும் தேசிய அளவில் ட்ரெண்டானது.
இதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் சாந்தனு, இயக்குநர் வெற்றிமாறன் என பலரும் அந்த டி-ஷர்ட்டுகளுடன் வெளியிட்ட போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் இந்தி பட வாய்ப்பு வந்தால் மட்டும் இவர்கள் எல்லாம் டி-சர்ட்டை கழட்டி எரிந்துவிடுவார்கள் என விமர்சனங்கள் பறந்தது.
இந்நிலையில் நடிகையும், பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில தலைவியுமான காயத்ரி ரகுராம் புதிய டி-சர்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் தமிழ் எங்கள் வேலன் ஹிந்தி நம்ம தோழன் வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. அத்துடன் பிரதமர் மோடி புகைப்படத்துடன் திருவள்ளுவர், பாரதியார் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த டி-சர்ட் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.