கண்ணாடி முன்னாடி கண்ணை கட்ட வைக்கும் ரைசா வில்சன்..ஹாட் போட்டோ சூட்

Published : Sep 30, 2022, 07:02 PM ISTUpdated : Sep 30, 2022, 07:04 PM IST
கண்ணாடி முன்னாடி கண்ணை கட்ட வைக்கும் ரைசா வில்சன்..ஹாட் போட்டோ சூட்

சுருக்கம்

அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர் குஷி படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது கையில் மொபைல் வைத்தபடி ரைசா கொடுத்துள்ள மிரர் போட்டோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி 2 மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார் ரைசா வில்சன். அதில் வசுந்தராவின் பிஏவாக இவர் நடித்திருப்பார். அதே ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 1 போட்டியாளராக களம் இறங்கினார். கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த சீசனில் ரைசா வில்சன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் 63 நாட்கள் இடம்பெற்று இருந்தார்.

அந்த நிகழ்ச்சி இவரது பேர் புகழை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து சென்றது. வெளியில் வந்த இவர் பியார் பிரேமா காதல் என்னும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதில் நாயகனாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டிருந்த இந்த படம் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...ஜெயிச்சுட்ட மாறா... முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிய சூர்யா! மறக்க முடியாத தருணம்!

தமிழ் திரையுலகில் யாரெல்லாம் தேசிய விருது பெறுகின்றனர் .. இதோ முழு லிஸ்ட்

பின்னர் ஹரிஸ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே என்னும் படத்தில் காமியோ ரோலில் தோன்றியிருந்தார். பின்னர் துரு விக்ரம் அறிமுகம் ஆகியிருந்த வர்மா படத்திலும் நடித்திருந்தார். ஆனால் அந்த படத்தின்  கதை மாற்றப்பட்டதால் இவரது கதாபாத்திரம் அதில் இடம்பெறவில்லை. தொடர்ந்து பொய்க்கால் குதிரை தற்போது காபி வித் காதல், ஆலிஸ் ,காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி மாஸ் காட்டி வருகிறார்.

பிக் பாஸ் தமிழ் ஒன்றில் பங்கேற்ற பிறகும் பிக்பாஸ் 2 வில் விருந்தினராகவும், ஜீன்ஸ் சீசன் 2வில் போட்டியாளர்களாகவும் கலந்து கொண்டார். ஆனந்த விகடன் சினிமா விருதுகள், எடிசன் விருது, எட்டாவது சைமா விருது, 66-வது பிரிப்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு கிடைத்துள்ளன. இதற்கிடையே தனது அழகான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர் குஷி படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது கையில் மொபைல் வைத்தபடி இவர் கொடுத்துள்ள மிரர் போட்டோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!