'நானே வருவேன்' சக்ஸஸ்... செல்வராகவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தாணு..!

By manimegalai a  |  First Published Sep 30, 2022, 3:59 PM IST

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் நேற்று வெளியான 'நானே வருவேன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இயக்குனர் செல்வராகவனுக்கு திடீர் என இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு.
 


'துள்ளுவதோ இளமை', 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன', ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து, தனுஷ் நான்காவது முறையாக தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ளது மட்டும் இன்றி, இந்த படத்தின் கதையையும் எழுதியுள்ளார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  இன்று வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்துடன் நேரடியாக மோதிய 'நானே வருவேன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: அல்ட்ரா மாடர்ன் உடையில்... ஒல்லி பெல்லி இடையை காட்டி பாலிவுட் நடிகைகளுக்கே செம்ம டஃப் கொடுக்கும் ராஷ்மிகா!
 

இந்த வருடத்தில் வெளியான தலைசிறந்த சைக்காலஜி திரில்லர் படம் 'நானே வருவேன்' என்கிற பெயரையும் பெற்றது. மேலும் பொன்னியின் செல்வனுடன் தனுஷின் இந்த படம் மோதுவது குறித்து, தயாரிப்பாளர் தாணுவிடம் பேட்டியில் கேள்வி எழுப்பியபோது... இந்த படத்தை 100 முறை பார்த்துவிட்டேன் கண்டிப்பாக இந்த படம் வெற்றிபெறும் என தெரிவித்திருந்தார். அவர் சொன்னது போலவே 'நானே வருவேன்' திரைப்படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: மணிரத்னத்துக்கு 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் மிகப்பெரிய சவால்..! ஏன் தெரியுமா?
 

நேற்று ஒரே நாளில் மட்டும், 'நானே வருவேன்' திரைப்படம்  10 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால், படத்தின் வசூல் அதிகரிக்கும் என திரைப்பட வட்டாரத்தில் கூறப்படும் நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. திடீர் என இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு விசிட் அடித்து, அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது மட்டும் இன்றி, மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். இதுகுறித்த புகைடபங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!