நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸுக்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

Published : Jul 11, 2022, 01:04 PM IST
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸுக்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

சுருக்கம்

Raghava Lawrence : சினிமாவில் படு பிசியாக நடித்து வரும் லாரன்ஸ், சமூக நலப்பணிகளையும் மேற்கொண்டு வருவதோடு, ஆசிரமம் ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார். 

தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி பிரபலமான ராகவா லாரன்ஸ். பின்னர் நடிகராகவும் ஒருசில படங்களில் நடித்து கலக்கிய இவர், முனி, காஞ்சனா போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இதையும் படியுங்கள்.... மும்பையில் கவர்ச்சி நடிகையுடன் திடீர் சந்திப்பு... வைரலாகும் விக்கி - நயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

குறிப்பாக இவர் இயக்கிய காஞ்சனா 1, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைபோடு போட்டு வசூலை வாரிக்குவித்தது. காஞ்சனா படத்தை இந்தியில் லக்‌ஷ்மி என்கிற பெயரில் ரீமேக் செய்ததன் மூலம் பாலிவுட்டிலும் இயக்குனராக அறிமுகமானார் ராகவா லாரன்ஸ்.

இதையும் படியுங்கள்.... பலமுறை மனைவியை அடித்திருக்கிறேன்... இருந்தும் காதல் குறையவில்லை : விஜயின் தந்தை!

தற்போது இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கைவசம் ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர துர்கா என்கிற பேய் படத்தை இயக்கியும் வருகிறார் லாரன்ஸ். இவ்வாறு சினிமாவில் படு பிசியாக நடித்து வரும் லாரன்ஸ், சமூக நலப்பணிகளையும் மேற்கொண்டு வருவதோடு, ஆசிரமம் ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார். அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி பயிலவும் உதவி வருகிறார் லாரன்ஸ்.

இதையும் படியுங்கள்.... பரிசு பெட்டகத்துடன் நயன் -விக்கிக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்..வெளியானது அழகிய திருமண புகைப்படங்கள்!

இந்நிலையில், லாரன்ஸின் இந்த உதவி மனப்பான்மைக்கு தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி அவருக்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த பட்டத்தை தனது சார்பில் தனது தாயார் பெற்றுக்கொண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள லாரன்ஸ். விருது பெற்றபோது எடுத்த புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் லாரன்ஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!