Prabhudeva son : தாடி மீசையுடன் அச்சு அசல் தந்தையை போலவே இருக்கும் பிரபுதேவாவின் மகனைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமான பிரபுதேவா, பின்னர் நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக உருவெடுத்தார். அதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் அக்ஷய் குமார், சல்மான் கான் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனராகவும் வலம் வந்தார் பிரபுதேவா.
இதையும் படியுங்கள்... உதயநிதி மகனுக்கு திடீரென வந்த ஹீரோ ஆசை.. தந்தை ரூட்டில் செல்கிறாரா இன்பநிதி? - கிருத்திகா சொன்ன சுவாரஸ்ய தகவல்
undefined
தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் பிரபுதேவா, தமிழில் மட்டும் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது மை டியர் பூதம் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் பிரபுதேவா.
இதையும் படியுங்கள்... "ஒரு நாள் முழுக்க குதிரையிலிருந்து பயிற்சி எடுத்தார்" விக்ரமின் டெடிக்கேஷனை பகிர்ந்த நிழல்கள் ரவி!
இதனிடையே டுவிட்டரில் அவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று படு வைரல் ஆகி உள்ளது. ஏனெனில் அந்த புகைப்படத்தில் அவரது மகனும் இருக்கிறார். மறைந்த நடிகர் பாண்டுவிடம் நடிகர் பிரபுதேவாவின் மகன் ஆசி பெறுவது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து உங்களை மிஸ் பண்றேன் சார் என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்... கோப்ரா ஆடியோ லான்ச்-ல் கலந்து கொள்வாரா விக்ரம்? சீயான் உடல் நிலை குறித்த அப்டேட்..
தாடி மீசையுடன் அச்சு அசல் தந்தையை போலவே இருக்கும் பிரபுதேவாவின் மகனைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். சிலரோ அவரும் அவரது தந்தையைப் போல் சினிமாவில் நடிக்க வருவாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.