
இயக்குனர் மணிரத்தினம் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வனில் நடிகர் கார்த்தி வந்திய தேவனாக நடித்துள்ளார். வல்லவராயன் வந்தியதேவன் என்பவர் வாணர் குல இளவரசனும் துணிச்சலான சாகசம் மற்றும் போர் வீரனாக இருந்துள்ளார். இவர் நகைச்சுவை திறன் மிகுந்தவராகவும் வரலாறுகளில் சித்தரிக்கப்படுகிறார்.
இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்திக் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்துள்ள நிலைகள் சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது அந்த வீடியோவை தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் நமது வரலாறு குறித்து அறியாமல் இருப்பது குறித்து நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...விஜய் சேதுபதி மனைவியா இது? நயன்தாரா - விக்கி திருமணத்தில் ஜோடியாக கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படம் வைரல்!!
வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்தி, அதில் நம் மன்னர்கள் எப்படி இருந்தார்கள் அது அவர்களின் அரசாட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நமக்கு எதுவுமே தெரிவதில்லை. கடந்த 2000 -ம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை, வீராணம் ஏரி, அடித்தளமே இல்லாமல் கட்டப்பட்ட கோவில் போன்றவை குறித்து இன்னும் அறியாமல் தான் உள்ளோம். என தடாலடியாக பேசி உள்ளார் கார்த்தி.
மேலும் செய்திகளுக்கு...ஈகை திருநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !
மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்திஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகவுள்ளது. சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, விக்ரம், பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் பொன்னியின் செல்வன் குறித்த எதிர்பார்ப்பை எதிரச் செய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..குடும்பத்துடன் வாழ்த்து சொன்ன சூர்யா, விஜய்சேதுபதி.. நட்சத்திர பெருவிழாவாக நயன் - விக்கி வெட்டிங் ..
பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு உருவான இந்த படம் கட்டாயம் ஆயிரம் கோடிகளைத் தொடும் என்கிற பேச்சும் எழுந்துள்ளது. இதற்கிடையே உலகநாயகன் கமலஹாசனும் இந்த படத்தில் உள்ளதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஏற்கனவே கமலஹாசன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்பு முயற்சி செய்ததாகவும், அது வெற்றியடையாததை அடுத்து மணிரத்தினத்தின் இயக்கத்தில் தற்போது ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற டீசர் விழாவில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, சரத்குமார், இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,. திடீர் உடல்நல குறைவால் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. அதேபோல நடிகை ஐஸ்வர்யா ராய்யும் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.