ஏன் அம்மாவிற்கு கோவில் கட்டுகிறேன்.... ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்....!!!

 
Published : Jan 27, 2017, 05:55 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
 ஏன் அம்மாவிற்கு கோவில் கட்டுகிறேன்.... ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்....!!!

சுருக்கம்

சினிமாவில் கதாநாயகனாக  நடிப்பவர்கள் பலர் நிஜத்திலும்அப்படி வாழ்வார்களா என்று பார்த்தால் அது சந்தேகம் தான். ஆனால் இவர்களில் இருந்து வித்தியாச பட்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

நடன இயக்குனராக திரையுலகினரால் அறிய பட்ட இவர், பல வருடங்கள் போராடி கதாநாயகனாகும் வாய்ப்பை பெற்றார், ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை ஆனால் தன்னுடைய விடா முயற்சியால் இன்று முன்னனி நாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்கள் தொடர் வெற்றி  பெற்றது.

தனக்கு வந்த லாபத்தை, பல சிறந்த வேலைகளுக்காகவும் தற்போது செலவு செய்து வருகிறார் லாரன்ஸ். அதில் முக்கியமானது குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு இவர் உதவியதன் மூலம் இன்று பல்லாயிரம் குழந்தைகள் மறு வாழ்வு பெற்றுள்ளனர்.

இதையெல்லாம் விட இவர் செய்து வரும் ஒரு காரியம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அது அவருடைய அம்மாவிற்காக இவர் தற்போது கட்டிவரும் கோவில்.  ஏன் அம்மாவிற்கு கோவில் கட்டிவருகிறேன் என லாரன்ஸ் மனம் திறந்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில் எனக்கு சிறுவயதில் கைகால்கள் சரியாக இல்லை. வறுமையில் இருந்த போதும் என்னை தூக்கிக்கொண்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று என் அம்மா மருத்துவம் பார்த்தார் என்றும்.

பேருந்து கட்டணத்தை கூட குறைத்துக்கொண்டு தனக்கு  பிடிக்கும் என்பதற்காக ரோஸ்மில்க் வாங்கித்தருவார்.

இதுபோன்று பல விஷயங்களில் தியாகம் செய்து என்னை வளர்த்தார் என் அம்மா அந்த நன்றிக்காகத்தான் அவருக்கு தற்போது கோவில் கட்டினேன். அவருக்கு விருப்பம் இல்லாதபோதும் மற்றவர்கள் இதைப்பற்றி பேசுவது என் தாயாருக்கு மகிழ்ச்சியை தரவேண்டும் என்று நினைத்தேன் என்றார்.

மேலும், இதை பார்த்தாவது பணத்தை செலுத்தி முதியோர் இல்லங்களில் பெற்றவர்களை விடும் பிள்ளைகள் திருந்தவேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இப்படி பட்ட செயல்கள் மூலமும், தமிழகத்தில் வீர விளையாட்டிற்கு தடை விதித்த போது மாணவர்களுடன் நின்று போராடி வெற்றி கண்டது என பல விஷயங்களில்  இவர் ரீலில் மட்டும் ஹீரோ அல்ல ரியல்லிலும் ஹீரோ என நிரூபித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு