
மணிரத்னம் இயக்கத்தில் தற்போது கார்த்தி, அதிதி ராவ் நடித்து வெளிவர தயாராகி கொண்டிருக்கும் படம் 'காற்று வெளியிடை' இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் படக்குழுவினர்.
இந்நிலையில் இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரும் ஏப்ரல் 7ஆம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் 'தல 57' திரைப்படம் ரம்ஜான் திருநாளான ஜூன் 23ஆம் தேதியும், தனுஷின் 'பவர்பாண்டி ஏப்ரல் 14ஆம் தேதியும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படங்களுக்கு முன் ஏப்ரல் 7ஆம் தேதியே 'காற்று வெளியிடை' படத்தை வெளிவிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.