மாணவர்களுடன் ஒருவராய் வருகிறேன்.... ஊடகங்களுக்கு சாட்டையடி பதில் கொடுத்த ராகவா லாரன்ஸ்...!!!

 
Published : Jan 27, 2017, 04:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
மாணவர்களுடன் ஒருவராய் வருகிறேன்.... ஊடகங்களுக்கு சாட்டையடி பதில் கொடுத்த ராகவா லாரன்ஸ்...!!!

சுருக்கம்

நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது தனது உடல்நலம் சரியில்லாத போதிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உணச்சிக்கு மதிப்பு கொடுத்து ஜல்லிக்கட்டு தடை நீங்குவதற்கு தொடர்ந்து 6 நாட்கள் போராடினர்.

மேலும் அவர்களுக்கு தேவையான  உணவு, மருத்துவ உதவிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை தன்னால் முடிந்த வரை  வழங்கினார். 

இறுதிவரை போராட்டத்தில் கலந்துகொண்டவர் கடைசி நேரத்தில் கலவரம் வெடித்ததால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானார். 

தற்போது ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களுடன் சேர்ந்து போராடிய மீனவர்களுக்காக குரல் கொடுத்து, அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை உதவிகள் செய்துள்ளார்.

இந்நிலையில் தனது  முகநூல் பக்கத்தில்  வீர விளையாட்டை மீட்க குரல் கொடுத்த  அனைவருக்கும்  நன்றி தெரிவிக்கும் விதமாய் தன் கருத்துகளை வெளியிட்டதோடு தன்னை பல டிவி நிகழ்ச்சிகளில்  நேர்காணலுக்கு அழைக்கும் ஊடகங்கள் மாணவர்களையும்  கூப்பிடுங்கள் என கூறியுள்ளார்.

நானும் அவர்களோடு ஒருவனாய் கலந்துகொள்கிறேன் என சாட்டையடி பதில் கொடுத்துள்ளார் லாரன்ஸ் , இதுவே அவர் ஒரு ரியல் ஹரோ என காட்டுகிறது. 


அவர் கூறியுள்ள கருத்துக்கள் இதே....
அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி, இணையதள, பண்பலை நண்பர்களுக்கு வணக்கம்.
எனக்கு எப்போதும் பக்கபலமாக இருந்து ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு என்றென்றும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
மெரீனாவில் மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு தமிழ் சமுதாயம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
வயது, ஜாதி, மதம் என எல்லாவற்றையும் கடந்து தான் அந்த வெற்றியை மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
சில பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி நண்பர்கள், இணையதளம்,பண்பலை மற்றும் ஊடக நண்பர்கள் அந்த வெற்றி சம்மந்தமாக பேட்டி, நேர்காணல், விவாத நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கிறார்கள். இந்த வெற்றி முழுவதும் மாணவர்களையும், இளைஞர்களையும் சேர்ந்தது. தயவு செய்து மேற்சொன்ன நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழையுங்கள். அவர்களோடு நானும் ஒருவனாகக் கலந்து கொள்கிறேன். என்னை மட்டும் அழைப்பது நியாயமாக இருக்காது என்பதை நான் பணிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
ராகவா லாரன்ஸ்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு