என் செல்லத்துக்கு ஹாப்பி பர்த்டே... சரத்குமார் மகள் வரலட்சுமி மீது பாசமழை பொழிந்த ராதிகா - வைரலாகும் வீடியோ

By Ganesh A  |  First Published Mar 5, 2024, 10:00 AM IST

நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு ராதிகா வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.


நடிகர் சரத்குமார் கடந்த 1984-ம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு மகளாக பிறந்தவர் தான் வரலட்சுமி. கடந்த 2000-ம் ஆண்டு சரத்குமார் சாயாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ராகுல் என்கிற மகன் உள்ளார். சரத்குமாரின் முதல் மனைவி சாயா தற்போது தனது மகள் வரலட்சுமி உடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

சரத்குமார் மகள் வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து விஜய்யின் சர்க்கார், தனுஷின் மாரி 2, விஷாலின் சண்டைக்கோழி போன்ற படங்களில் வில்லியாக நடித்து அசத்திய வரலட்சுமி பின்னர் டோலிவுட் பக்கம் சென்றார். அங்கு அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் ஆனதால் வரலட்சுமிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... ராதிகா மற்றும் வரலட்சுமியோடு வந்து கோவில் கும்பாபிஷேக விழாவை நடத்திவைத்த சரத்குமார் - வைரலாகும் போட்டோஸ்

இதனிடையே அண்மையில் நடிகை வரலட்சுமிக்கு திருமணம் நிச்சயமானது. அவர் நிக்கேலாய் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார். மும்பையில் ஆர்ட் கேலரி நடத்தி வரும் நிக்கேலாய்யும், வரலட்சுமியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் ஓகே சொன்னதை அடுத்து நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் சரத்குமாரின் இரண்டாவது மனைவி ராதிகா, வரலட்சுமிக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து பாசமழை பொழிந்துள்ளார். அந்த வீடியோவுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம்.. வைரலாகும் சுப்ரீம் ஸ்டார் மருமகன் போட்டோ..

click me!