கெத்து காட்டிய ஜோ! ஏமார்ந்த ஜெயம் ரவி! 2015ஆம் ஆண்டு தமிழக அரசின் திரைப்பட விருதுகளை பெற்ற பிரபலங்கள் விவரம்!

By manimegalai a  |  First Published Mar 4, 2024, 11:11 PM IST

2015 ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் சற்று முன் அறிவிக்கப்பட்ட நிலையில், விருதுகளை வென்ற பிரபலங்கள் யார் யார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 


தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது... "தமிழ்நாடு அரசின் சார்பில், திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா, 6.3.2024 புதன்கிழமை மாலை, 6:00 மணி அளவில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவை டிஎன் ராஜரத்தினம் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.

Tap to resize

Latest Videos

ஆத்தாடி! மகன் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில்.. நிதா அம்பானி அணிந்திருந்த எமரால்டு நெக்லஸ் எவ்வளவு தெரியுமா?

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பே சாமிநாதன் விழாவிற்கு தலைமை ஏற்று விருந்தினர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசு, ஊக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேருரையாற்றுவார்.

 மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலை துறை அமைச்சர் கே பி சேகர் பாபு ஆகியோர், சிறப்புரை ஆற்றுவார்கள். திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பரிசு பெறும் 2015 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட, சிறந்த திரைப்படங்கள் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்களும் இத்துடன் வெளியாகி உள்ளது.

இதில் சிறந்த படத்திற்கான முதல் பரிசை 'தனி ஒருவன்' திரைப்படம் பெறுகிறது. சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பரிசு 'பசங்க 2' படத்திற்கும், மூன்றாம் பரிசு 'பிரபா' என்கிற படத்திற்கும் கிடைத்துள்ளது. சிறப்பு பரிசு 'இறுதி சுற்று' படத்திற்கும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படமாக '36 வயதிலேயே' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Rajinikanth: ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குறித்து.. ரஜினிகாந்த் கூறியது என்ன தெரியுமா?

மேலும் சிறந்த நடிகருக்கான விருதை 'இறுதிச்சுற்று' படத்தில் நடித்ததற்காக ஆர் மாதவன் பெற உள்ளார். சிறந்த நடிகைக்கான விருது '36 வயதினிலே' படத்தில் நடித்த ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசினை கௌதம் கார்த்திக் 'வை ராஜா வை' படத்தில் நடிகர்களுக்காக கொடுக்கப்படுகிறது. அதேபோல் சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசினை 'இறுதி சுற்று' பட நடிகை ரித்திகா சிங் பெறுகிறார்.

சிறந்த வில்லன் நடிகருக்கான விருது 'தனி ஒருவன்' படத்தில் நடித்த அரவிந்த்சாமிக்கும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது 'அஞ்சுக்கு ஒன்னு' படத்தில் நடித்த சிங்கம் புலிக்கும் வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த நகைச்சுவை நடிகையாக '36 வயதினிலே' மற்றும் 'திருட்டு கல்யாணம்' படத்தில் நடித்த தேவதர்ஷினி பெற உள்ளார். சிறந்த நடிகராக 'அபூர்வ மகான்' படத்தில் நடித்த தலைவாசல் விஜய்க்கு வழங்கப்படுகிறது.

Soundarya: டாப் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா! யாரு தெரியுமா.. அந்த பிரபலம்!

அதே போல் சிறந்த நடிகைக்கான விருது 'பாபநாசம்' படத்தில் நடித்த கௌதமிக்கு வழங்கப்பட உள்ளது. சிறந்த இயக்குனராக 'இறுதி சுற்று' பட இயக்குனர் சுதா கொங்கரா தேர்வாகியுள்ளார். சிறந்த கதாசிரியராக தனி ஒருவன் பட இயக்குனர் மோகன் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சிறந்த இசையமைப்பாளராக உத்தம வில்லன் மற்றும் பாபநாசம் படத்திற்கு இசையமைத்த ஜிப்ரன் பெறுகிறார்.  சிறந்த பாடலாரியாருக்கான விருதினை 36 வயதினிலே படத்திற்காக விவேக் வாங்குகிறார்.

மேலும் சிறந்த பின்னணி பாடகர் ஆக 'வை ராஜா வை' படத்தில் இடம்பெற்ற பாடலை பாடிய, கானா பாலா பெற உள்ளார். சிறந்த பின்னணி பாடகியாக '36 வயதினிலே' படத்திற்காக கல்பனா ராகவேந்தரா பெற உள்ளார்.  சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது தனி ஒருவன் படத்தில் பணியாற்றிய ராம்ஜிக்கு வழங்கப்பட உள்ளது. சிறந்த நடன ஆசிரியருக்கான விருதை பிருந்தா பெருகிறார். அதை போல் சிறந்த காஸ்டியூம் டிசைனர் ஆக வாசுகி பாஸ்கர் 'மாயா' படத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக மாஸ்டர் நிஷேஸ் மற்றும் பேபி வைஷ்ணவி ஆகியோர் 'பசங்க 2' படத்தில் நடித்ததற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தனி ஒருவன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஜெயம் ரவிக்கு விருது கிடைக்காதது அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் எனலாம்.

 திரைபிரபலன்களுடன், தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!