
பிரபல நடிகை ராதிகா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடித்து வந்த 'சந்திரகுமாரி' சீரியலில் இருந்து வெளியேற உள்ளதாக அவரே கூறியுள்ளது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
80 களில் ரஜினி, கமல், விஜயகாந்த், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் ராதிகா. திருமணமான பின்பு, கதாநாயகி வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், வெயிட்டான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து சிறந்த குணச்சித்திர நடிகையாக வலம் வந்தார்.
மேலும் சித்தி சீரியல் மூலம் கடந்த 1999 ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமான இவர், இடைவிடாது, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி என 20 வருடங்களாக சீரியலில் தொடந்து நடித்து வந்தார்.
இந்நிலையில், ஒரு சில காரணங்களால் தற்போது நடித்து வரும் 'சந்திரகுமாரி' சீரியலில் இருந்து விளங்குவதாகவும். இவருக்கு பதில் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நடிகை விஜியும், அழகி தொடருக்கு பின் இந்த சீரியலில் நடிக்க வருவது தனக்கு மகிழ்ச்சி என்றும், ராதிகாவிற்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 20 வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வந்த நடிகை ராதிகா திடீர் என வெளியேறியுள்ளது, ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.