10 ஆம் வகுப்பில் காதலித்து ஏமாற்றிய காதலன்! காத்திருந்து பழிவாங்கிய முன்னணி நடிகை!

Published : Apr 02, 2019, 02:50 PM IST
10 ஆம் வகுப்பில் காதலித்து ஏமாற்றிய காதலன்! காத்திருந்து பழிவாங்கிய முன்னணி நடிகை!

சுருக்கம்

'ஆடுகளம்' படத்தில் அறிமுகமான வெள்ளாவி வைச்சி வெளுத்து பொண்ணு நடிகை 'டாப்சி'. முதல் முறையாக தன்னுடைய காதல் அனுபவம் குறித்தும். தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்கிய விதம் குறித்தும் கூறியுள்ளார்.  

'ஆடுகளம்' படத்தில் அறிமுகமான வெள்ளாவி வைச்சி வெளுத்து பொண்ணு நடிகை 'டாப்சி'. முதல் முறையாக தன்னுடைய காதல் அனுபவம் குறித்தும். தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்கிய விதம் குறித்தும் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்சி. தமிழில், அஜித் நடித்த 'ஆரம்பம்', 'வந்தான் வென்றான்', 'காஞ்சனா' ஆகிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தினார். 

தற்போது, ஹிந்தியில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். மேலும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பதை விட, கதைக்கும், கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் பாலிவுட் திரையுலகத்தில் நடித்த 'முல்க்', 'பிங்க்', 'பட்லா' ஆகிய படங்கள் இவருக்கு வெற்றி படங்கமாக அமைந்தது. இவர் நடிப்பில் வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் தான் தற்போது அஜித் நடித்து வருகிறார். டாப்சி நடித்த கதாப்பாத்திரத்தில், நடிகர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டாப்சி பேட்டி ஒன்றில், காதலனை பழி வாங்கியது குறித்து பேசியுள்ளார். இவர் 10 ஆம் வகுப்பு படித்த போது, ஒருவரை காதலித்தாராம். அவருடன் நெருக்கமாகவும் இருந்தாராம். சில நாட்களுக்கு பிறகு அந்த பையன் இவரை விட்டு விலகியதை அறிந்த டாப்சி, சரி என எந்த பிரச்னையும் செய்யாமல் விட்டு விட்டாராம். 

பின் மீண்டும் சில வருடங்கள் கழித்து சமூக வலைத்தளம் மூலம் டாப்ஸியை , முன்னாள் காதலன் நெருங்கி வர துவங்கியுள்ளார். மேலும் அவன் இன்னொரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்ததை அறிந்த டாப்சி. அவனை நம்ப வைத்து... பேசி, அந்த பதிவை முன்னாள் காதலன் பழகி வந்த மற்றொரு பெண்ணுக்கு அனுப்பி பழி தீர்த்துக்கொண்டதாக கூறியுள்ளார். இவர் சொன்னதை கேட்டு ஒரு நிமிடம் ரசிகர்கள் ஷாக் ஆகியிட்டார்கள். அதே போல் இவரின் தைரியத்தையும் பாராட்டி வருகிறார்கள்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாய தொறக்காத தங்கமயில்'; 80 சவரன் நகையின் உண்மை தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மெகா ட்விஸ்ட்!
அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?