
படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கவரும் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து, நினைத்த காட்சிகளை எடுத்து முடிக்கமுடியாமல் போவதால் இனி அஜீத் பாணியில் இண்டோர் ஷூட்டிங் மட்டுமே வைத்துக்கொள்வது என்று விஜய் 63’ படக்குழு முடிவெடுத்துள்ளதாக அப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்றபோது, சென்னையில் நடத்தினால் மட்டுமே இங்குள்ள கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என விஜய் கேட்டுக் கொண்டதால், இங்கேயே படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
தற்போது நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, காசிமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்பு நடந்த போது, விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் பெருமளவு கூடிவிட்டார்கள். இதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். அதே போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்ததால் பலமுறை நினைத்த காட்சிகளை எடுக்கமுடியாமல் படப்பிடிப்பை பாதியில் முடித்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் விஜய் விரைவில் சென்னை திரும்பவுள்ளார். அதனைத் தொடர்ந்து 'தளபதி 63' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இனி முழுமையாக அரங்குகளில் மட்டுமே நடைபெறவுள்ளது. இதற்காக பின்னி மில்ஸ், ஈவிபி மற்றும் ஆதித்யராம் ஸ்டூடியோஸ் ஆகியவற்றில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இப்பிரச்சினைகளால்தான் அஜீத் தனது படப்பிடிப்புகளை சில வருடங்களாகவே வெளி மாநிலங்களிலேயே வைத்துக்கொண்டிருக்கிறார். தற்போது அஜீத் வழியில் தனது படப்பிடிப்புகளையும் திட்டமிட்டுக்கொள்ளவேண்டிய நிலை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.