பீட்டா அமைப்பை கடுமையாக விமர்சித்து ..... போராட்டத்தை தொடர்ந்த நடிகர் ராதாரவி....!!!

 
Published : Jan 19, 2017, 12:23 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
பீட்டா அமைப்பை கடுமையாக விமர்சித்து ..... போராட்டத்தை தொடர்ந்த நடிகர் ராதாரவி....!!!

சுருக்கம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தயாரிப்பாளர்கள்  ஒன்று கூடி தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டை மீட்க போராடும் பல லட்ச இளைஞர்களுக்கு குரல் கொடுத்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் இல்லாமல், பல பிரபலங்கள் மற்றும் இளைஞர்களும் சேர்ந்து பீட்டாவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராடி வருகின்றனர் .

இதில் பேசிய மூத்த நடிகர் ராதாரவி, பீட்டா அமைப்பை  முதலில் வெளியேற்ற வேண்டும் என கூறினார், மேலும் அமெரிக்காவில் இருந்து வந்து எங்களுடைய கலாச்சாரத்தை முடக்க நீ யார் நாயே.... வெளியே போ என மிகவும் ஆக்ரோஷமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், என் நாட்டு பிள்ளைகள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக எந்த ஒரு பேதமும் இன்றி தங்களுடைய கலாச்சாரத்தை மீட்க பொங்கி எழுந்து போராடுவது போல, வேறு எந்த நாட்டில் உள்ளவர்களும் நடத்திட முடியாது என கூறினார். 

மேலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரும் வரை ஒரு வாரம் கூட ஆனாலும் இந்த போராட்டம் மாபெரும் போராட்டமாக மாறி தொடர்ந்து நடைபெறும் என கூறினார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!