
விரைகிறார் அஜித்....! தல57 சூட்டிங் கேன்சல் செய்துவிட்டு, ஜல்லிகட்டுக்காக நாடு திருப்புகிறார்..!
ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் , இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் வலுத்துவரும் நிலையில்,இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் களத்தில் குதித்து வருகின்றன.
இந்நிலையில், நாளை ஜனவரி 20ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் மௌன அறவழி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறவழி போராட்டமானது, நாளை காலை 8மணி முதல் மாலை 6 மணி வரை நடக்குள்ளது.இதில் அனைத்து நடிகர்களும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.
தல அஜித்:
இந்த போராட்டத்தில், தல அஜித் கலந்துக்கொள்ள, அவருடைய தல57 படப்பிடிப்பை நிறுத்திவிட்டு பல்கேரியாவில் இருந்து புறப்பட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் இளைஞர்களில் , தல ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.