குறிப்பிட்ட இனத்தினரை சாடி எடுகாட்டுள்ளதா இராவண கோட்டம்? பற்றி எரியும் பிரச்சனைக்கு படக்குழு விளக்கம்!

By manimegalai a  |  First Published May 11, 2023, 4:33 PM IST

குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களை சாடி, காயப்படுத்துவது போல் இராவண கோட்டம் படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்க்கு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
 


'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம், தன்னுடைய முதல் வெற்றியை தமிழ் திரையுலகில் பதிவு செய்த இயக்குனர் விக்ரம் சுகுமாரன், இயக்கியுள்ள திரைப்படம் 'ராவண கோட்டம்'. இந்த படத்தில் நடிகர் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபு, இளவரசு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தை, கண்ணன் ரவி என்பவர் தயாரித்துள்ளார்.

இப்படம் கருவேலம் காட்டு அரசியலை பேசும் படமாக உருவாக்கியுள்ளது. மேலும் கடந்த 1957 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நாளை இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், இப்படம் குறிப்பிட்ட இனத்தினரை சாடி, அவர்களை காயப்படுத்துவது போல் எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவியதை தொடர்ந்து, இப்படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என சிலர் போர்க்கொடி உயர்த்தத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து, இந்த படத்தின்  தயாரிப்பு நிறுவனமான, கண்ணன் ரவி குரூப்ஸ் இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

தண்ணீருக்குள் படமாக்கப்பட்ட 'கஸ்டடி' படத்தின் காட்சிகள்! மேக்கிங் வீடியோவை வெளியிட்டு மிரளவைத்த படக்குழு!

அந்த அறிக்கையில் கூறி இருபதாவது... "மண் சார்ந்த கதையை, மனிதத்தை அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே எங்கள் இராவண கோட்டம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். கே ஆர் ஜி குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க கற்பனையில் உருவாக்கப்பட்ட கதையாகும். எந்த வகையிலும், இனம், மொழி சார்ந்து யாரையும் காயப்படுத்தும் வகையில் எந்த ஒரு காட்சியும் படத்தில் இடம்பெறவில்லை.

நேற்று நடந்த பத்திரிக்கையாளர் முன் வெளியிட்டு காட்சி மற்றும் பிரத்தேக காட்சியில் படம் பார்த்த பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள், நண்பர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர் மற்றும் மக்கள் இடையேயான ஒற்றுமையையும் அன்பையும் போற்றும் இப்படத்தின் கருவை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஃபர்ஹானா' திரைப்படம் எந்த மதத்திற்கும்.. உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல! படக்குழு விளக்கம்!

படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்துவதாக எழுதியுள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது.  இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்த வில்லை தயவு கூர்ந்து வதந்திகளை நம்பி, படத்தின் மீது தடை கோருவதும், படத்தை தடுக்கும் நோக்கத்திலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என படக்குழு தெரிவித்துள்ளது.


 

click me!