பிரபல யூடியூப்பரான இர்பானுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அதற்காக அவர் உலகநாயகன் கமல்ஹாசனை அழைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
சினிமா பிரபலங்களுக்கு இணையாக யூடியூப் பிரபலங்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் யூடியூப் மூலம் மிகவும் பிரபலமானவர் இர்பான். இவர் இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் சினிமா விமர்சனங்களை செய்து வந்த அவர், அதற்கு வரவேற்பு கிடைக்காததால், பல்வேறு ஊர்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளை சுவைத்து, அதனை வீடியோவாக வெளியிட தொடங்கினார்.
இர்பானின் ஃபுட் விலாக் வீடியோக்களுக்கு வரவேற்பு கிடைக்கத் தொடங்கியதால், அதனை பின்பற்றி தொடர்ந்து பல்வேறு வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள உணவுமுறைகளை பற்றியும் விதவிதமான உணவுகளை சுவைத்தும் வீடியோ வெளியிட்டு, மிகவும் பிரபலம் ஆனார். சமீப காலமாக இவர் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுடனும் ஃபுட் சேலஞ்ச் செய்து இவர் வெளியிட்ட வீடியோக்கள் வேறலெவலில் ரீச் ஆகின. இவருக்கு யூடியூப்பில் 35 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
யூடியூபர் இர்பானுக்கு வருகிற மே 14-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்கும் வேலையில் படு பிசியாக இருக்கிறார் இர்பான். குறிப்பாக திரையுலக பிரபலங்களையும், அரசியல் பிரபலங்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார் இர்பான். அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தனது குடும்பத்தினருடன் சந்தித்து இர்பான் திருமண அழைப்பிதழ் வழங்கிய புகைப்படம் வெளியாகி வைரலானது.
undefined
இதையும் படியுங்கள்... நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மனைவிக்கு சிறைத் தண்டனை... காரைக்குடி நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு - பின்னணி என்ன?
இந்நிலையில், இர்பான் தன்னுடைய பேவரைட் நடிகரான கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார். அப்போது இர்பானின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர். அழைப்பிதழை பெற்றுக்கொண்டு இர்பானை வாழ்த்திய கமல்ஹாசன், தூணிலும் இர்பான்; துரும்பிலும் இர்பான் என கூறி, அவர்களுடன் சிறிதுநேரம் கலந்துரையாடினார். இதுகுறித்த வீடியோ காட்சிகளை இர்பான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
யூடியூபர் இர்பானுக்கு கடந்த 2021-ம் ஆண்டே திருமணம் நடப்பதாக இருந்தது. அப்போது திருமண நிச்சயம் முடிந்த பின்னர் மணப்பெண்ணுக்கும் இர்பானுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் திருமணத்தை நிறுத்திவிட்டார் இர்பான். பின்னர் திருமணம் நின்றது குறித்து இர்பான் யூடியூபில் வீடியோவும் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மாஸ்டருக்கு பின் லியோவிலும் விஜய்யுடன் கூட்டணியா? - உண்மையை போட்டுடைத்த விஜய் சேதுபதி