நாளை முதல் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி... புதுச்சேரி அரசு அதிரடி..!

By manimegalai aFirst Published Oct 31, 2021, 2:48 PM IST
Highlights

ஒருபக்கம் தீபாவளி திருநாளை முன்னிட்டு திரையரங்குகளை மூட வேண்டும் என, தமிழகத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், மற்றொரு புறம், யூனியன் பிரதேசமான புதுவையில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு புதுவை அரசு அனுமதி கொடுத்துள்ளதால், திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஒருபக்கம் தீபாவளி திருநாளை முன்னிட்டு திரையரங்குகளை மூட வேண்டும் என, தமிழகத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், மற்றொரு புறம், யூனியன் பிரதேசமான புதுவையில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு, புதுவை அரசு அனுமதி கொடுத்துள்ளதால், திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா இன்னும் பல்வேறு மாவட்டங்களில் முழுமையாக ஒழிக்கப்படாவிட்டாலும், அரசு எடுத்து வரும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியவற்றால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை வெகுவாக குறைத்துள்ளது.

மேலும் செய்திகள்: தலையில் ஹெல்மெட்டுடன் குட்டி தல! அப்பா 8 பாய்ந்தால்... 16 அடி பாய தயாராகும் அஜித் மகன் ஆத்விக்! வைரல் போட்டோ..

தொடர்ந்து பாதிப்புகள் இறங்கு முகமாக இருந்த காரணத்தினால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கொண்டே வந்தன. ஒரு கட்டத்தில் தியேட்டர்களும் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் இயங்கலாம் என்ற அனுமதியை தமிழக அரசு தந்துள்ளது. இப்போது இந்த அனுமதிக்கு வேட்டு வைக்கும் விதமாக நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தியேட்டர் உரிமையாளர்களையும் மட்டுமல்ல சினிமா ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுக்க தொடங்கி இருக்கிறது.

மேலும் செய்திகள்: காத்து வாங்க ரொம்ப வசதியா... ஓப்பன் ட்ரெஸ்ஸில் மொத்த அழகையும் காட்டிய அஞ்சலி! கிறுகிறுத்து போன ரசிகர்கள்!

 

திரையரங்கில் விசேஷ நாட்களில் மக்கள் அதிகம் கூடினால், கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறி வரும் 3ம் தேதி… தீபாவளி பண்டிகைக்கு முந்தின நாள் மற்றும் தீபாவளி நாளான நவம்பர் 4ம் தேதி ஆகிய இரு நாட்களிலும் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களை மூட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கை தூத்துக்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள தமது மனுவில் கூறி இருப்பதாவது: தமிழகம் முழுவதும் தற்போது திருவிழாகாலமாக இருக்கிறது. இந்த தருணத்தில் அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றுவார்களா என்பது சந்தேகமே. பாதிப்புகள் குறைந்ததால் தான் தியேட்டர்கள் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் இயங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படவில்லை.

மேலும் செய்திகள்: Puneeth Rajkumar உடலுக்கு கண்ணீரோடு முத்தமிட்டு இறுதி அஞ்சலி செலுத்திய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை!

 

இந்தாண்டு தீபாவளியன்று அண்ணாத்த உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களில் வெளியாகின்றன. கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுக்க இது மேலும் வழிவகுக்கும். ஆகையால் தியேட்டர்களை 100 சதவீதம் இயங்கலாம் என்று அளிக்கப்பட்டு உள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3 மற்றும் தீபாவளி நாளான நவம்பர் 4 ஆகிய தேதிகளில் தியேட்டர்களை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. சிவமுருகன் ஆதித்தன் தொடர்ந்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்: Breaking: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நிலை பற்றி விசாரிக்க மருத்துவமனைக்கே சென்ற முதல்வர் ஸ்டாலின்!!

 

இப்படி ஒரு புறம் திரையரங்குகள் 100 சதவீதம் இயங்க தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் புதுவையில் 100 சதவீத திரையரங்குகள் இயங்க புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது.  மேலும் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி கோவில்களில், நடத்தப்படும் திருவிழாக்கள், சூரசம்ஹாரம் போன்றவைக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

click me!