Breaking: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நிலை பற்றி விசாரிக்க மருத்துவமனைக்கே சென்ற முதல்வர் ஸ்டாலின்!!

By manimegalai aFirst Published Oct 31, 2021, 12:07 PM IST
Highlights

காவேரி மருத்துவமனையில் திடீர் உடல்நல பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரடியாக காவேரி மருத்துவமனைக்கே விரைந்து, உடல் நலம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

காவேரி மருத்துவமனையில் திடீர் உடல்நல பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரடியாக காவேரி மருத்துவமனைக்கே விரைந்து, உடல் நலம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

மேலும் செய்திகள்: Puneeth Rajkumar உடலுக்கு கண்ணீரோடு முத்தமிட்டு இறுதி அஞ்சலி செலுத்திய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை!

தாதா சாகேப் பால்கே விருது, வாங்குவதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்ற ரஜினிகாந்த், தன்னுடைய பயணத்தை முடித்து வந்த கையேடு, பேரனுடன் 'அண்ணாத்த' படத்தை பார்த்து மகிழ்ந்ததாக, மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் துவங்கியுள்ள hoote ஆப்பில் பதிவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீர் என அக்டோபர் 28 ஆம் தேதி மாலை திடீரென, ரஜினிகாந்த் உடல்நல பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியானது.

மேலும் செய்திகள்: சரிந்து விழும் சேலையை சரி செய்யாமல்... மெல்லிய இடையை காட்டி கவர்ச்சி ட்ரீட் வைத்த வாணி போஜன்! போட்டோஸ்..

 

ஆனால் அவரது குடும்பத்தினர் இதற்க்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, வருடாந்திர உடல் பரிசோதனை காரணமாகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது உடலுக்கு என்னதான் கோளாறு? எதற்காக இந்த திடீர் அட்மிட் என்ற கேள்விகள் துளைத்தெடுக்க பெரும் கவலையில் ஆழ்ந்தனர். தலைவர் உடல்நலம் பூரண குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள், திரையுலகத்தினர் உள்பட பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்: அச்சு அசல் தாத்தா ரஜினிகாந்தை உரித்து வைத்தது போல் போஸ் கொடுத்த பேரன்..! வைரலாகும் புகைப்படம்..!

 

இதுபற்றி மருத்துவமனை வெளியிட்ட தகவலில், தலைசுற்றல் காரணமாக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது ரத்தத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் சிகிச்சை மேற்கொள்ள பட்டதாகவும், அது நல்லபடியாக முடிந்து தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது ஐசியு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் மருத்துவ குழுவினர், தொடர்ந்து ரஜினிகாந்த் உடல்நிலையை தீவிரமாக கவனித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: 'ரோஜா' சீரியல் நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி..! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..!

 

இந்நிலையில் நேற்றைய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு நேரடியாகவே சென்று ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

நேற்றைய தினம் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிபாலயத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிவலைக்கும், மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அனுவித்து விட்டு தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை வந்த கையேடு, இன்று காலையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நன்கு உடல்நலம் தேறி வரும் ரஜினிகாந்த இன்னும் ஓரிரு நாட்களில், டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!