
முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், ரோட்டரி கிளப்பும் இணைந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரை உலக்கினருக்கு கொரானா தடுப்பூசி போடும் முகாம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது.
இதற்க்கு சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியம், மற்றும் ரோட்டரி கிளப், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி, செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், ஆல் இந்தியா பிலிம் பேடேரஷன் தலைவர் எஸ்.தாணு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் காட்ரகட்ட பிரசாத், செயலாளர் ரவி கொட்டாரகார, கில்ட் தலைவர் ஜாகுவார் தங்கம், fefsi நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து பலர் இதில் கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சத்திற்கான காசோலையை, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்த்தவர்கள் வழங்கினர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.