நடிகர் விஷால் பிரபல நடிகரின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார்!

Published : Jun 09, 2021, 07:02 PM ISTUpdated : Jun 09, 2021, 07:09 PM IST
நடிகர் விஷால் பிரபல நடிகரின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார்!

சுருக்கம்

நடிகர் விஷால், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மீது, காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

நடிகர் விஷால், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மீது, காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் திரை உலகின் பல வெற்றி படங்களை இயக்கி மிகவும் பிரபலமானவர் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்பி செளத்ரி. இவர் பிரபல நடிகர்களான ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தையும் ஆவார். இவர் மீது, நடிகர் விஷால் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தன்னுடைய புகார் மனுவில் விஷால் கூறியுள்ளதாவது,  தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் தான் கடன் பெற்றதாகவும், அந்த கடனை உரிய தேதியில் முறையாக கொடுத்து விட்ட பின்னரும், கடன் கொடுக்கும் போது, தன்னிடம் கையெழுத்து பெற்ற பத்திரத்தை திரும்ப தரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் விஷாலின் இந்த புகார் குறித்து, காவல்துறை ஆணையர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆர்.பி.செளத்ரியின் மகன்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகிய இருவருமே விஷாலின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் நிலையில்,  தற்போது இவர்களது தந்தை மீது விஷால் புகார் அளித்துள்ளது தமிழ் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?