
சமீப காலமாக வரலாற்று சிறப்பு மிக்க கதைகளுக்கும், இதிகாச புராண கதைகள் குறித்து தெரிந்து கொள்வதில் மக்கள் ஆவர்வம் காட்டி வருவதால், இதனை மையமாக வைத்து பலர் படம் எடுக்க துவங்கி விட்டனர். அந்த வகையில் ராமாயணத்தில் இடம்பெறும் சீதா தேவியை மையமாக வைத்து படம் எடுக்க பாலிவுட் இயக்குனர் ஒருவர் நடிகையை அணுகிய போது, அவர் 12 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாலிவுட் நாயகிகள் பலர் திருமணத்திற்க்கு பிறகும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில், ஐஸ்வர்யா ராய், மாதூரி தீக்ஷித் , மற்றும் கரீனா கபூர் என சொல்லி கொண்டே போகலாம். இந்நிலையில், பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருந்துவரும் தேசாய் தற்போது சீதா பார்வையில் இருந்து ராமாயணக் கதையை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கதையில் சீதாவாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரை படக்குழு அணுகியதாகவும், இந்தப் படத்திற்கு அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, கரீனா செட் ஆக மாட்டார் என யோசித்த படக்குழு அவருக்கு பதில் மற்றொரு நாயகியை தற்போது தீவிரமாக தேடி வருகிறார்களாம். சமீபத்தில் தான் கரீனா கபூர் தன்னுடைய இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். மேலும் திருமண ஆகி குழந்தை பெற்ற பின்பும் பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்கவே கோடி கணக்கில் சம்பளம் இவர் கேட்டு வருவதாகவும் பாலிவுட் திரையுலகில் பேச்சு அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் தேசாய் சீதாவின் கண்ணோட்டத்தில் இருந்து இயக்க உள்ள இராமாயணக் கதை குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.