முள்ளும் மலரும், சின்னக்கவுண்டர் படங்களின் தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் காலமானார்!

Published : Feb 01, 2025, 10:46 AM IST
முள்ளும் மலரும், சின்னக்கவுண்டர் படங்களின் தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் காலமானார்!

சுருக்கம்

பிரபல தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் வி நடராஜன், உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முள்ளும் மலரும் திரைப்படத்தை தன்னுடைய ஆனந்தி பிலிம்ஸ் மூலம் தயாரித்தவர் வி நடராஜன். 1978 ஆம் ஆண்டு இந்த படத்தின் மூலம் தான் மகேந்திரன் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ரஜினிகாந்த், சரத் பாபு, ஜெயலட்சுமி, சோபா, உள்ளிட்ட பலர் நடிக்க பாலுமகேந்திரா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், சிறந்த படத்திற்கான ஃபிலிம் ஃபேர் விருது,  தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருது, உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதை குவித்தது. இந்த திரைப்படம் மட்டும் இன்றி, ஆர் சி சக்தி இயக்கத்தில், பிரபு - ரகுவரன் நடிப்பில் வெளியான சிறை, கே சுபாஷ் இயக்கிய கலியுகம், பிரபு நடித்த உத்தம புருஷன், தர்மசீலன், ராஜா கைய வச்சா, நடிகர் சத்யராஜ் நடித்த பங்காளி, விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர், ஜெயலலிதா நடிப்பில் வெளியான நதியை தேடி வந்த கடல், போன்ற பல படங்களை ஆனந்தி பிலிம்ஸ் மூலம் தயாரித்து ஹிட் கொடுத்துள்ளார்.

70 வயதாகும் இவர் வயது மூப்பு பிரச்சனைகளால், கடந்த சில வருடங்களாக அவதி பட்டு வந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில்,  மாரடைப்பு ஏற்பட்டு இவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  இவருக்கு ஜோதி என்கிற மனைவியும், செந்தில் - விக்கி என்கிற இரண்டு மகன்களும் உள்ளனர். இன்று மாலை 4 மணியளவில் மயிலாப்பூர் இடுகாட்டில் இவருடைய இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலியை கரம்பிடித்தார் ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு! வைரலாகும் போட்டோஸ்!

மேலும் தற்போது இவருடைய உடல் அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இவரின் இறப்பு செய்தி குறித்து அறிந்து பல நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை இவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!