
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் வசித்து வந்தாலும், சமூக வலைத்தளத்தில் வெளியாகும் ஆக்கபூர்வமான விஷயங்களை உற்று நோக்கி வருகிறார். அந்த வகையில், தமிழகத்தில் முதல் முறையாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டதற்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. கடந்த நான்கு வருடங்களாக சென்னையில் தங்கி பிரபல கால் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திடீர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தற்காலிகமாக அவருடைய டிரைவர் பணியை தொடர முடியாமல் போனது.
மேலும் ஊரடங்கு காரணமாக தன்னுடைய சொந்த ஊரான தேனிக்கு சென்றுள்ளார். அங்கு ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றுள்ளார். அதையடுத்து தற்போது அவருக்கு 108 அவரச ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் முதல் ஆபுலன்ஸ் பெண் ஓட்டுநர் என்கிற பெருமையும் வீரலட்சுமிக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வீரலட்சுமியை மனதார பாராட்டி போஸ்ட் ஒன்றையும் போட்டுள்ளார். டிப்ளமா படித்துள்ள வீரலட்சுமி கனரக வாகனங்களின் லைசென்ஸ் பெற்று தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநராக சென்னையில் பணியமர்த்த பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.