மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ஜி.வி.பிரகாஷ்... நடிகர், இசையமைப்பாளராக ஒரே நேரத்தில் செய்த சாதனை...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 5, 2020, 8:05 PM IST
Highlights

 தனுஷ் - அதிதி ராவ் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 
 

தமிழில், தொடர்ந்து தரமான கதைகளை கொண்ட படங்களை இயக்கி, வெற்றி இயக்குநர் என்பதை தாண்டி, எதார்த்தமான இயக்குனர் என ரசிகர்களால் பார்க்கப்படுபவர் இயக்குநர் 'வசந்த பாலன்' . இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'ஜெயில்'. ஏற்கனவே இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷுக்கு முதல் வாய்ப்பு கொடுத்த வசந்தபாலன் இந்த முறை ஹீரோவாக்கி அழகு பார்த்துள்ளார். 

2006ம் ஆண்டு வசந்த பாலன் இயக்கிய “வெயில்” படம் மூலம் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது மீண்டும் 14 வருடங்கள் கழித்து வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் படத்தில் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் இணைந்துள்ளார். கடந்த ஒருவருடமாக ரிலீசுக்கு காத்திருக்கும் இந்த திரைப்படம் ஊரடங்கிற்கு பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த படத்தில், நடிகர் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடிய நிகழ்ச்சியான “எங்கள் வீடு மாப்பிள்ளை” நிகழ்ச்சியில், ஆர்யாவை துரத்தி துரத்தி காதலித்து, அவருக்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்த, தஞ்சாவூர் பொண்ணு அபர்ணதி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். கடந்த 15ம் தேதி இந்த படத்தில் இடம் பெற்றுள்ள “காத்தோடு காத்தானேன்” பாடல் வெளியிடப்பட்டது. தனுஷ் - அதிதி ராவ் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

ஜி.வி.பிரகாஷ், அபர்ணதியின் ரொமான்ஸ் சீன்களுடன் வெளியான காத்தோடு காத்தானேன் பாடல் தற்போது 8 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. இதை தனது ஜி.வி.பிரகாஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

We hit 8️⃣ MILLION!

Overwhelmed with the love! Thank you 🤗 from ➡️ https://t.co/2kCAUlPrlC pic.twitter.com/4OJI6qsune

— G.V.Prakash Kumar (@gvprakash)
click me!