எந்த படத்திற்கும் எடுக்காத ரிஸ்க்கை 'அசுரன்' ரிமேக்கிற்காக எடுத்த பிரியாமணி!

Published : Jun 04, 2021, 04:13 PM IST
எந்த படத்திற்கும் எடுக்காத ரிஸ்க்கை 'அசுரன்' ரிமேக்கிற்காக எடுத்த பிரியாமணி!

சுருக்கம்

இந்நிலையில் எந்த படத்திற்கும் எடுக்காத ரிஸ்க்கை இந்த படத்திற்காக எடுத்துள்ளதாக பிரியாமணி அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தில் நடிகர் தனுஷ் தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் மிரட்டி இருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு, மற்ற மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: 44 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறாரா விக்ரம் பட நடிகை? தீயாய் பரவும் தகவல்..!
 

அந்த வகையில் தெலுங்கில் இந்த படம் 'நாரப்பா' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில், தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில்... தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக, தமிழில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் பிரியா மணி நடித்துள்ளார். தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ள இந்த பாடத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், கொரோனா பிரச்சனையின் காரணமாக போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் எந்த படத்திற்கும் எடுக்காத ரிஸ்க்கை இந்த படத்திற்காக எடுத்துள்ளதாக பிரியாமணி அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல முறை நடிகர் வெங்கடேஷுடன் நடிக்க தனக்கு வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் அப்போதெல்லாம் மற்ற படங்களுக்கு கால் ஷீட் கொடுத்திருந்தால் நடிக்க முடியாமல் போனது. 

மேலும் செய்திகள்: இந்திய அளவில் 'திரிஷ்யம் 2 ' படம் படைத்த சாதனை! எதில் தெரியுமா?
 

அதே போல் அசுரனின் ரீமேக்காக எடுக்கப்படும் 'நாரப்பா' படத்திற்கு அணுகும் போதும், சில படங்களுக்கு கால் ஷீட் கொடுத்திருந்தேன். ஆனால் நடிகர் வெங்கடேஷுடன் நடித்தே ஆகவேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்து, அந்த படங்களுக்கு இடையே கால் ஷீட் கொடுத்தேன் என தெரிவித்துள்ளார். மற்ற எந்த படங்களுக்கும் இது போல் ரிஸ்க் எடுத்து இல்லை என்றும் பிரியாமணி இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: மும்பையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் நடிகைகள் இருவர் கைது? வெளியான அதிர்ச்சி தகவல்!
 

திருமணத்திற்கு பிறகும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதில் ஆர்வம் காட்டி வரும் பிரியாமணி, நடிப்பில் இன்று சமந்தாவுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'ஃபேமிலி மேன் 2 ' வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த தொடர், வெளியான போதிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் திடீர் என என்ன பிரச்சனைகள் வெடிக்கும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

karthigai Deepam : கார்த்திக் மீது பொய் வழக்கு... சாமுண்டீஸ்வரியிடம் நேருக்கு நேர் மோதிய ரேவதி!
Modha Rathri Review : மொத ராத்திரி படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ