
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து பிரின்ஸ் திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை அனுதீப் இயக்கி உள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜாதிரத்னலு படத்தை இயக்கியவர் ஆவார். பிரின்ஸ் படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்கிற வெளிநாட்டு நடிகை நடித்துள்ளார்.
பிரின்ஸ் படத்தின் ரிலீசை ஒட்டி நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டர் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அதில் ரசிகர்கள் #AskSK என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கேட்கும் கேள்விகளுக்கு வீடியோ வாயிலாக பதிலளித்து அதனை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். அவரிடம் கேள்வி கேட்டு ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... குடும்பத்தோடு பொன்னியின் செல்வன் படம் பார்த்த இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே - வைரலாகும் போட்டோஸ்
அந்த வகையில் மாநாடு படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு, நம்ம எப்போ சார் ஷூட்டிங் போலாம் என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “ஷூட்டிங் எப்போவேணாலும் போலாம் சார். ஆனா இந்த கதை எப்ப சார் கேட்கலாம். அதேமாதிரி அந்த படத்துல பிரேம்ஜியோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன்” என கேட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை வெங்கட் பிரபு தான் இயக்க உள்ளார். இதற்கான சூசக அறிவிப்பாகவும் இது பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் அனைத்திலும் பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பதால் அவரை கலாய்ப்பதற்காகவே பிரேம்ஜியோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன் என கேட்டுள்ளார் சிவா.
சிவகார்த்திகேயன் கதை கேட்டதற்கு, வடிவேலு மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார் வெங்கட் பிரபு. இவர்கள் இருவர் இடையேயான டுவிட்டர் கலாட்டா ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்... அயலான் திரைப்படம் தாமதம் ஆவது ஏன்?... எப்பதான் ரிலீசாகும் - மனம்திறந்த சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.