மகள் ஐஸ்வர்யா படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினிகாந்த்..! ஹீரோ குறித்து வெளியான மாஸ் தகவல்!

By manimegalai a  |  First Published Oct 19, 2022, 9:45 PM IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தின் ஹீரோ குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 


தின் மகள் என்பதை தாண்டி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் இயக்குனராகவும் நன்கு அறிமுகமானவர். இவர் தன்னுடைய கணவர் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். ஆனால் இந்த திரைப்படம், எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறவில்லை. எனினும் சமீபத்தில் தெலுங்கில் வெளியான இந்தப்படம் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது.

இந்த படத்தில்க்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். அதேபோல் இந்த படத்தின் மூலம்தான் இன்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, 'வை ராஜா வை' என்கிற படத்தை இயக்கினார். மேலும் சினிமா வீரன் என்கிற டாக்குமெண்டரி ஃபிலிம் ஒன்றையும் இயக்கினார். தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இயங்கி வந்தாலும், குழந்தைகள் பிறந்த பின்பு திரையுலகில் இருந்து விலகி குழந்தைகளை கவனித்துக் கொண்ட இவர் தற்போது மீண்டும் சினிமாவில் தன்னுடைய கவனத்தை செலுத்த துவங்கியுள்ளார்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: லோ நெக் கவர்ச்சியில்.. கலர் ஃபுல் உடையணிந்து கவர்ச்சி விருந்து வைக்கும் மாளவிகா மோகனன்..! செம்ம ஹாட் போட்டோஸ்!
 

குறிப்பாக கணவர்டனான விவாகரத்து குறித்து அறிவித்த பின்னர், தன்னை எப்போதும் பரபரப்பாக வைத்துக்கொள்ள நினைக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடிக்கடி கோவில்களுக்கு செல்வது, உடற்பயிற்சி செய்வது, டயட், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, என இருந்தார். மேலும் அடுத்ததாக இயக்க உள்ள படத்தின் கதையை தயார் செய்வதிலும் மும்முரம் காட்டிய நிலையில், இவர் இயக்க உள்ள படம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில்... முதலில் ஜெயராம் இந்த தோற்றத்தில் தான் நடிக்க இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!
 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நிறுவனம் தயாரிப்பில் இயக்க உள்ள படத்தின், பூஜை நவம்பர் முதல் வாரத்தில் நடக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகளின் வேண்டுகோளுக்காக கேமியோ ரோலில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இந்த தகவல் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
 

click me!