
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. வம்சி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது இறுதியாக விஜய், ராஷ்மிகா நடிக்கும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. இதன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ கூட சமீபத்தில் லீக் ஆனது.
இதனிடையே வாரிசு படத்தின் முதல் பாடல் வருகிற தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் என கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. ஆனால் படக்குழு இதுகுறித்து எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாததால், தீபாவளிக்கு பாடல் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்கிற குழப்பத்திலேயே ரசிகர்கள் இருந்து வந்தனர்.
இதையும் படியுங்கள்... viduthalai movie update : முடிவுக்கு வருமா சூரியின் படம்... தயாரிப்பாளருக்கு தலைவலியாக மாறிய விடுதலை?
ரசிகர்களின் குழப்பத்தை போக்கும் வகையில், அப்படத்தின் இசையமைப்பாளர் தமன் குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார். நேற்று சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள பிரின்ஸ் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமன், விஜய்யின் வாரிசு பட அப்டேட்டையும் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், வருகிற தீபாவளிக்கு வாரிசு பட பாடல் ரிலீசாக உள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி அப்பாடலை விஜய் பாடி உள்ளதாகவும் தமன் கூறி இருந்தார். இதன்மூலம் சமீபத்தில் லீக்கான ரஞ்சிதமே என்கிற பாடலைத் தான் அநேகமாக முதல் பாடலாக வெளியிடுவார்கள் போல தெரிகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Diwali 2022 TV Special Movies : தீபாவளிக்கு டிவியில் என்ன படம்?...இதோ சின்னத்திரை மூவி லிஸ்ட்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.