கோபியின் மனைவியாக ஆகிவிட்டாலும், அதற்கான அங்கீகாரம்... தொடர்ந்து பாக்கியாவிற்கே கிடைப்பதால் ராதிகா அசிங்கப்பட்டு போகிறார். இன்னும் என்னென்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொலைக்காட்சி தொடர்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் பல்வேறு திருப்புமுனைகளுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
பெற்றோரின் ஆசைக்காக காதலித்த பெண்ணை மறந்து, பாக்யா லக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டு பிடிக்காமல் வாழ்ந்து வரும் கோபி, பின்னர் ராதிகாவை சந்திக்க நேரிடுகிறது. ராதிகா கணவரை விட்டு விலகி மகளுடன் தனியாக வசித்து வருவதை அறிந்த கோபி, மீண்டும் ராதிகாவை காதலிக்க துவங்குகிறார். ராதிகா தன்னுடைய கணவரிடம் இருந்து பிரிந்து விவாகரத்து பெற்றதால், தன்னுடைய மனைவி பாக்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்று ராதிகாவை திருமணம் செய்து கொள்ள துடிக்கிறார் கோபி. இதற்காக அவர் போட்ட நாடகங்களும் நடிப்பும் கொஞ்சம் நஞ்சமல்ல. இவர் நடிப்பை சீரியலில் பார்த்தே கரித்து கொட்டிய பல ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் செய்திகள்: நயன் - விக்கி முதல் ரவீந்தர் - மகாலட்சுமி வரை.. இந்த வருஷம் ஜம்முனு தலை தீபாவளி கொண்டாட உள்ள நட்சத்திர ஜோடிகள்
இப்படி விறுவிறுப்பும், பரபரப்பும் குறையாத காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு வழியாக காதலித்த ராதிகாவையே கோபி பல பிரச்சனைகளை கடந்து இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். இப்போதுதான் இந்த சீரியல் மேலும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. திருமணம் முடிந்த கையேடு காதல் மனைவி ராதிகாவுடன், கோபி தேன்நிலவு கொண்டாட வருகிறார். மேலும் இவருடைய, அம்மா, மகன், மகன், அப்பா, பாக்கியா அனைவரும்... மூர்த்தி குடும்பத்துடன் கோபி வந்த இடத்திற்கே சுற்றுலாவுக்காக வருகிறார்கள்.
ஹானிமூன் கொண்டாடும் ஆசையில் வந்த கோபியை தொடர்ந்து பல பிரச்சனைகள் சுழற்றி அடிக்கிறது. போட்டிங் சென்றால் அங்கேயும் கோபியின் தந்தையும், கண்ணனும் வந்து பாட்டு பாடி அவரை கதற விடுகிறார்கள். ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்து, விருது விழாவிற்கு போனால் அங்கேயும் ராதிகா ஆசைங்கப்படும் அளவுக்கு தரமான சம்பவம் அரங்கேறுகிறது. இந்த விருது விழாவை நடத்தும் கோபியின் நண்பன், கோபியின் மனைவி என பாக்கியாவை மேடையில் ஏறி பேச சொல்கிறார். இதனால் ஆசைங்கப்பட்டு கோபியின் குடும்பத்தினர் முன்பு ராதிகா தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழல் உருவாகிறது.
மேலும் செய்திகள்: தமிழில் டுவிட் போட்ட சச்சின்... ஏ.ஆர்.ரகுமான் உடனான சந்திப்பு குறித்து நெகிழ்ச்சி - வைரலாகும் போட்டோ!
ஹானிமூன் கொண்டாடும் ஆசையில் வந்த கோபியை தொடர்ந்து பல பிரச்சனைகள் சுழற்றி அடிக்கிறது. போட்டிங் சென்றால் அங்கேயும் கோபியின் தந்தையும், கண்ணனும் வந்து பாட்டு பாடி அவரை கதற விடுகிறார்கள். ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்து, விருது விழாவிற்கு போனால் அங்கேயும் ராதிகா ஆசைங்கப்படும் அளவுக்கு தரமான சம்பவம் அரங்கேறுகிறது. இந்த விருது விழாவை நடத்தும் கோபியின் நண்பன், கோபியின் மனைவி என பாக்கியாவை மேடையில் ஏறி பேச சொல்கிறார். இதனால் ஆசைங்கப்பட்டு கோபியின் குடும்பத்தினர் முன்பு ராதிகா தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழல் உருவாகிறது. சைலண்டாக மேடை ஏறும் பாக்கியா... கோபியின் பெயரை கூறாமலே கோபியை விமர்சனம் செய்து தரமான சம்பவம் செய்கிறார். எனவே அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்புகளுடன் நகர்கிறது பாக்கிய லட்சுமி சீரியல்.
சோலி முடிஞ்சு.. 😀
பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்கியலட்சுமி மகா சங்கமம் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/6TtWGXm39D