இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் ஞாயிற்று கிழமை அன்று சந்தித்த போது எடுத்து கொண்ட புகைப்படத்தை, தமிழில் ட்விட் போட்டு சச்சின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள ஏ.ஆர்.ரகுமானும், மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும் கலந்து கொள்வதும் வழக்கமான ஒன்று தான். மேலும் சச்சின் உடனான நட்பு குறித்து கேள்வி எழுப்பும் போது, பல முறை ஏ.ஆர்.ரகுமான் தங்களின் நட்பு குறித்து மேடைகளில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள் : உலக அளவில் அதிகம் தேடப்பட்ட தலைப்பு இந்த முன்னணி நடிகரின் படத்தின் பெயர் தான்? வெளியான ஆச்சர்ய தகவல்!
இந்நிலையில் நேற்று முன்தினம், இசை புயலும்... கிரிக்கெட் புயலும் சந்தித்து நட்பு பாராட்டியுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் நேவி ப்ளூ கலர் ஃபார்மல் ஷர்ட் அணிந்து மிகவும் எளிமையாக காட்சிளிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் பர்புல் நிற ப்ளேசர் அணிந்துள்ளார். இந்த புகைப்படத்தில் சச்சின் தன்னுடைய நண்பன் ஏ.ஆர்.ரகுமான் தோள்மீது கை போட்டபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த புகைத்தடத்தை பதிவிட்டு சச்சின் இசைப்புயல் என தமிழில் பதிவிட்டு, ஞாயிற்று கிழமையை ஏ.ஆர்.ரகுமானோடு செலவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இதே புகைப்படத்தை பதிவிட்டு ஏ.ஆர்.ரகுமான், மாஸ்டர் ப்ளாஸ்டருடன் ஹாங் அவுட் செய்வதாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hanging out with the -blaster pic.twitter.com/KOpMQuo5uW
— A.R.Rahman (@arrahman)மேலும் செய்திகள் : Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டில் திடீர் என மயங்கி விழுந்த போட்டியாளர்..! என்ன ஆச்சு?
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகத்திற்கு இசையமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் சில ஹிந்தி படங்களுக்கும், தமிழில் சிம்புவின் 'பத்து தல' போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இவர் இசையில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தில், பின்னணி இசை கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதே நேரத்தில் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Hanging out with the -blaster pic.twitter.com/KOpMQuo5uW
— A.R.Rahman (@arrahman)