
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தெனாலி' மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'கூகுள் குட்டப்பா', ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
குடும்பப்பங்கான, உணர்வு பூர்வமான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் இந்த படத்தில், நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும் செய்திகள்: மாமனார் வீட்டில் தளபதிக்கு காத்திருக்கும் பஞ்சாயத்து..? பழைய பிரச்சனை தீர்வுக்கு வருமா..
மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சித்தாரா, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரா, மைம் கோபி மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராம்சரண் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தின் படத்தொகுப்பை ஜான் மேற்கொள்ள, கலை வடிவமைப்பை அருண் கவனிக்கிறார்.
நேற்று விஜய் கனிஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. விஜய் கனிஷ்கா மற்றும் நடிகை சித்தாரா ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி ஆக்சன் கமர்ஷியல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.