அஜித் பட நடிகை பார்வதி நாயர் வீட்டில், ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுபோய்யுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அபுதாபியில் உள்ள மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் . மிஸ் கர்நாடகா, மிஸ் நேவி குயின் போன்ற சில அழகி பட்டங்களை பெற்ற இவர், நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக முதலில் மாடலிங் செய்ய துவங்கினார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து தென்னிந்திய திரையுலகில் நுழைந்தார். மலையாளத்தில் வெளியான 'பாப்பின் சூ' என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து ஒரு சில மலையாள படங்களில் நடித்தார். பின்னர் கன்னடம், மற்றும் தமிழ் பட வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க துவங்கினார். கதைக்கு முக்கியம் என்றால் அளவு கடந்த கவர்ச்சியில் கூட நடிக்க தயாராக இருக்கும் பார்வதி, தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த, 'நிமிர்ந்து நில்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய வைத்தது என்றால் அது, நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படம் தான். இந்த படத்தில், நடிகர் க்கு ஜோடியாக மிரட்டல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் செய்திகள்: 40 வயதில் கூட உள்ளாடை போடாமல் இப்படி ஒரு போஸா? ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கட்டழகை காட்டிய மீரா ஜாஸ்மின்!
தற்போது 'ஆலம்பனா' மற்றும் 'ரூபம்' ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருவதால், சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டான்லி சாலையில் வீடு எடுத்து வசித்து வருகிறார். அவ்வப்போது அபுதாபி சென்று வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் நபர் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்: மகள் ஐஸ்வர்யா படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினிகாந்த்..! ஹீரோ குறித்து வெளியான மாஸ் தகவல்!
இந்த புகாரில் கூறியுள்ளதாவது, ரூ.6 லட்சம் மதிப்புள்ள கைகடிகாரம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கைகடிகாரங்கள் காணவில்லை என்றும், 50, 000 மதிப்புள்ள மடிக்கணினி, மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோய் உள்ளதாக தன்னுடைய புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இவருடைய புகாரைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.