முடி வெட்டி... ஷேவ் செய்து ஒரு குழந்தை போல் கேப்டனை பார்த்து கொண்ட பிரேமலதா! வைரலாகும் Throw Back வீடியோ!

Published : Dec 28, 2023, 06:34 PM IST
முடி வெட்டி... ஷேவ் செய்து ஒரு குழந்தை போல் கேப்டனை பார்த்து கொண்ட பிரேமலதா! வைரலாகும் Throw Back வீடியோ!

சுருக்கம்

பிரேமலதா விஜயகாந்த், கேப்டனை குழந்தை போல் கவனித்து கொள்ளும் பழைய வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

தேமுதிக தலைவர் மற்றும் புரட்சி கலைஞர் விஜயகாந்த், இன்று காலை, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. எனவே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தேமுதிக அலுவலகத்தில் குவிந்துள்ளனர். அதே போல், பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலன்கள் அடுத்தடுத்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.

100க்கும் மேற்பட்ட போலீசார் தேமுதிக தலைமை அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை காலை விஜயகாந்தின் உடல், அவரது அலுவலகம் முன்பு அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகே சொன்ன ரஜினி! ஒரு கோடிக்கு பேரம் பேசியும் முடியாதுன்னு சொன்ன விஜயகாந்த்.. தெறித்து ஓடிய Coca-Cola நிறுவனம்!

விஜயகாந்த் ஒரு நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என்கிற அடையாளங்களை கடந்து.. ஒரு சிறந்த மனிதராகவே பலரது மனதில் இடம் பிடித்தவர், எனவே இவரது மறைவை தொடர்ந்து விஜயகாந்த் பற்றி பல தகவல்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து சமூல வலைத்தளத்தில் வெளியாகி வரும் நிலையில், தற்போது விஜயகாந்தின் மனைவி எப்படி கேப்டனை ஒரு குழந்தை போல் பார்த்து கொண்டார் என்பதை தெரிவிக்கும் விதத்தில், வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கேப்டனுக்கு தன்னுடைய கைகளாலேயே முடி வெட்டி, ஷேவ் செய்து... அவருக்கான அனைத்து பணிகளையும் செய்கிறார் பிரேமலதா. இந்த வீடியோ மூலம், பிரேமலதா விஜயகாந்த்...  கேப்டன் அவர்களை எப்படி பார்த்து கொண்டார் என்பதும் கேப்டன் மீது பிரேமலதா வைத்திருந்த அன்பும் வெளிப்படுவதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்திரகலாவை லெப்ட்-ரைட் வாங்கிய சாமுண்டீஸ்வரி! ஆதாரத்துடன் சிக்கிய வில்லி - இனி கலாவுக்கு இந்த வீட்டில் இடமில்லையா?
அச்சு அசல் மாதம்பட்டி ரங்கராஜ் போலவே இருக்கும் மகன்! ஜாய் கிரிசில்டா பகிர்ந்த "ஜூனியர் மாதம்பட்டி" வைரல் போட்டோ!