கேப்டனுக்கு மெரினா பீச்சுல இடம் கொடுக்கனும்! விஜயகாந்த் ரசிகர்கள் வைத்த கோரிக்கை... ஏற்குமா அரசு?

By Ganesh A  |  First Published Dec 28, 2023, 4:22 PM IST

சென்னை மெரினா கடற்கரையில் கேப்டன் விஜயகாந்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி அவரது ரசிகர்கள் அரசுக்கு கோரிக்கை முன்வைத்து உள்ளனர்.


தமிழ் திரையுலகின் தவிரக்க முடியாத நடிகராக வலம் வந்ததோடு, அரசியலிலும் மக்கள் மனதை வென்ற தலைவனாக திகழ்ந்தவர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு அடுத்தபடியாக சினிமாவில் இருந்து வந்து அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய தலைவர் என்றால் அது விஜயகாந்த் தான். குறுகிய காலத்திலேயே அரசியலில் அசுர வளர்ச்சி கண்ட விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.

கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவு காரணாமாக மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கடந்த வாரம் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்ற நிலையில், நேற்று திடீரென அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து வெண்டிலேட்டர் உதவியுடன் விஜயகாந்துக்கு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tap to resize

Latest Videos

விஜயகாந்தின் மறைவு செய்தியை அறிந்த உடன் ஓடோடி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து விஜயகாந்தின் உடன் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனவும் ஸ்டாலின் உறுதியளித்தார். நாளை மாலை தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ரசிகர்கள் அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்து உள்ளனர்.

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது போல் விஜயகாந்தின் உடலை அடக்கம் செய்ய பத்துக்கு பத்து இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர். அதோடு நாளைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். விஜயகாந்த் ரசிகர்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... நல்லவர்களாக நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் நல்லவராகவே வாழ்ந்தவர் விஜயகாந்த் - இயக்குனர் அமீர் இரங்கல்

click me!