நல்லவர்களாக நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் நல்லவராகவே வாழ்ந்தவர் விஜயகாந்த் - இயக்குனர் அமீர் இரங்கல்

By Ganesh A  |  First Published Dec 28, 2023, 4:00 PM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பருத்திவீரன் படத்தின் இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.


தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில், அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், இயக்குனரும், நடிகருமான அமீர், விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள்...  அவர் உடலை கூட பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்! விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இரங்கல்

Latest Videos

undefined

அந்த அறிக்கையில், “ஏழைகளின் தோழன், எளியவர்களின் பாதுகாவலன், அநீதியைத் தட்டிக் கேட்கும் துணிச்சல்காரர் என்று நிஜ நாயகனாகவே வாழ்ந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு உண்மையிலேயே தமிழ்த் திரையுலகுக்கும். இந்திய அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். திரைப்படங்களில் நல்லவர்களாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில், திரையிலும், தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த்

அவருடன் மறுபடியும் பேசி அளவளாவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்த என்னை, அவரது திடீர் மறைவு, பேரதிர்ச்சியிலும், மீளாத்துயரிலும் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தினத்தில் உச்ச நடிகராகவும் இல்லாமல், அரசியலில் பெரும் பதவியிலும் இல்லாமல் இருந்தாலும் ஒட்டு மொத்த தமிழக மக்களின் இதயத்திலும் நீங்கா இடம் பெற்றிருக்கும், சாதி - மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர், எங்களது "மண்ணின் மைந்தன்" கேப்டன் விஜயகாந்த் அவர்களது ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் அமைதியடைய வேண்டுகிறேன்”  என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... கேப்டனின் பணிகள் காலத்தால் அழியாதவை... விஜயகாந்த் மறைவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய உதயநிதி

click me!