
கேப்டன் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்த நிலையில், அவரை பற்றிய பல தகவல்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்து வெளியான திரைப்படம் 'ரமணா'. விஜிலெண்ட் ஆக்சன் திரைப்படமாக வெளியான இந்த படத்தில், விஜயகாந்த் ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அதேபோல் பிரபல பாலிவுட் நடிகை ஆஷிமா பாலா மற்றொரு நாயகியாக நடித்திருந்தார்.
கல்லூரியில் பிரபஸராக இருக்கும் ரமணா, தரமற்ற மண்ணில் கட்டப்பட்டுள்ள வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், பக்கத்தில் கனரக வாகனத்தை கொண்டும் நடைபெறும் பனியால் தீபாவளி தினத்தில் தன்னுடைய மனைவி, குழந்தைகளை இழந்து விடு, இதனை சட்ட பூர்வமாக நிரூபிக்க முடியாமல் போக, எப்படி இந்த பிரச்னையை கையாள்கிறார் என்பதே விறுவிறுப்பான காட்சிகளுடன் இயக்கி கை தட்டல்களை குவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ். 100 நாட்களுக்கு மேல் ஓடிய இந்த படத்தில், அந்த மருத்துவமனை காட்சி தான் செம்ம ஹை லைட்.
அரசு மருத்துவமனையில் உயிரிழந்து, இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட பிணத்திற்கு அரசு மருத்துவமனையில் பல மணி நேரம் சிகிச்சை அளித்து, பின்னர் இறந்து விட்டதாக கூறுவார்கள். இந்த காட்சிக்கு அந்த சமயத்தில் பல தனியார் மருத்துவமனைகள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். பின்னர் இந்த காட்சி குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது.
Vijayakanth Wish: இரண்டு மகன்கள் இருந்தும்... கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை!
இந்நிலையில் இந்த குறிப்பிட்ட காட்சியை சமூக வலைத்தளத்தில் விஜயகாந்தின் ரசிகர்கள் வெளியிட்டு... இப்படி ஒரு காட்சியை வைப்பதற்கே செம தில்லு வேணும், அது கேப்டனுக்கு இருந்தது என கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.