தமிழ் படங்களில் மட்டுமே நடித்த கேப்டன்.. ஆனாலும் ஆந்திராவில் வசூலை அள்ளிய விஜயகாந்தின் டப்பிங் படங்கள்..

By Ramya sFirst Published Dec 28, 2023, 2:51 PM IST
Highlights

பிரபல தெலுங்கு எழுத்தாளர் கோபிமோகன் விஜயகாந்த் மற்றும் தெலுங்கு திரையுலகம் இடையேயான உறவு குறித்து பேசினார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரும், தே.மு.தி.க.தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. தனது ரசிகர்களால் கேப்டன் எனவும், 'கருப்பு எம்ஜிஆர்' என்றும் அழைக்கப்பட்ட விஜயகாந்த், கடந்த 4-5 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் ஏற்பட்ட பேரிழப்பு என்று ரசிகர்களும், திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரபல தமிழ் தயாரிப்பாளர் கே.ஆர் விஜயகாந்த் மறைவு குறித்து பேசிய போது "திறமையான நடிகராகவும், நேர்மையான தலைவராகவும் இருந்ததால், தமிழ்த் திரையுலகிற்கும், அரசியல் களத்திற்கும் பெரும் இழப்பு" என்று தெரிவித்தார், மேலும் விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால், அரசியலில் தொடர்ந்து இருந்திருந்தால், தமிழக முதல்வராக வருவதற்கான அனைத்துத் தகுதியும் இருந்தது.: என்றும் தெரிவித்தார்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பிரபல தெலுங்கு எழுத்தாளர் கோபிமோகன் விஜயகாந்த் மற்றும் தெலுங்கு திரையுலகம் இடையேயான உறவு குறித்து பேசினார். அப்போது, "1980-களில், தெலுங்கு ரசிகர்கள், விஜயகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உறவினர் என்று நினைத்தார்கள், ஆனால் பின்னர் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, இரண்டு வெவ்வேறு நடிகர்கள் என்பதை உணர்ந்தனர்.” என்று தெரிவித்தார். 

‘போலீஸ் அதிகாரி’, ‘கேப்டன் பிரபாகர்’, ‘சிந்துரபூவு’, ‘நூறவா ரோஜு’, ‘சத்ரியுடு’ போன்ற விஜயகாந்தின் டப்பிங் படங்கள் , தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தன. 80 மற்றும் 90 களில் தெலுங்கு பார்வையாளர்களிடையே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் விஜயகாந்த். அவரது ஆக்‌ஷன் படங்கள் ஆந்திராவில் உள்ள பி & சி சென்டரில் கூட்டத்தை ஈர்த்தது.  ஏனெனில் அவரது பெரும்பாலான படங்கள் மாஸ் சென்ட்ரிக் பொழுதுபோக்கு படங்களாகவும் மற்றும் கிராமம் சார்ந்த திரைப்படங்களாக இருந்தன," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே..” சில படங்களுக்கு சம்பளமே வாங்காமல் நடித்த விஜயகாந்த்..!

இருப்பினும், விஜயகாந்த் தடங்களை மாற்றி திரைப்படத்துடன் பணியாற்ற தொடங்கி, 1990களில் நகர்ப்புற பார்வையாளர்களை ஈர்க்க தொடங்கினார். அவர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களிடம்  உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். ஹாலிவுட் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு, இந்த மாணவர்கள் யதார்த்தமான கருப்பொருள்களுடன் மென்மையாய் ஆக்ஷன் படங்களை வழங்கினர். இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது." என்று அவர் மேலும் கூறுகிறார்.பின்னர், விஜயகாந்தின் படங்களை தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் மற்றும் டாக்டர் ராஜசேகர் ஆகியோர் ரீமேக் செய்து வெற்றியை பதிவு செய்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

திரை வாழ்க்கை முழுவதுமே தமிழ் படங்களில் மட்டுமே நடித்த வெகு சில நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். எனினும் அவர் படங்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிகமாக டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இந்த படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!