லைட் மேன் முதல் ஹீரோ வரை.. எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான் - "ட்ரெண்ட் செட்டராக" மாறிய கேப்டன் விஜயகாந்த்!

Ansgar R |  
Published : Dec 28, 2023, 02:50 PM IST
லைட் மேன் முதல் ஹீரோ வரை.. எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான் - "ட்ரெண்ட் செட்டராக" மாறிய கேப்டன் விஜயகாந்த்!

சுருக்கம்

Captain Vijayakanth : தமிழ் சினிமா வரலாற்றில் பொட்டலம் சாப்பாடு என்ற முறையை மாற்றி, கலைஞர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வயிறார சாப்பாடு போட்ட மாமனிதர் விஜயகாந்த்.

கேப்டன் விஜயகாந்த் என்றாலே பல திரை கலைஞர்களுக்கும் சட்டென்று நினைவில் வரும் ஒரே விஷயம், அல்ல அல்ல குறையாமல் அண்ணமிடும் அந்த மிகப்பெரிய குணம் தான். இன்றளவும் கேப்டன் விஜயகாந்த் அவர்களை பெருமையோடு பலர் பேசும் விஷயம் அவர் தனது படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கும் குணம் கொண்டவர் என்பதை தான். 

ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் திரைத்துறையில் அறிமுகமான காலத்தில், ஒரு சமயம் அவர் உணவு உண்ண சென்ற பொழுது படத்தின் நாயகன் வந்து விட்டதால் உடனே எழுந்து ஷாட்டுக்கு வருமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஒரு விஷயம் தான் அவருடைய மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பசிக்கு உணவு கூட உண்ண முடியாத ஒரு சூழ்நிலையில் தான் பல திரைப்பட கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். 

திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த விஜயகாந்த் டாப் 15 டக்கரான திரைப்படங்கள் - லிஸ்ட் இதோ

அதன்பின் தனது நண்பர் ராவுத்திருடன் இணைந்து அவர் திரைப்படங்களை தயாரிக்க துவங்கியதும், தன்னுடைய படங்களில் பணியாற்றும் லைட் மேன் முதல் உச்ச நட்சத்திரமாக பணியாற்றும் அனைவருக்கும் ஒரே விதமான உணவு வழங்குமாறு அவர் தனது தயாரிப்பாளர்களை கேட்டுக் கொண்டார். அதேபோல அந்த உணவிற்கு ஆகும் செலவை தனது சம்பளத்திலிருந்து தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் பல திரைப்படங்களில் விஜயகாந்த் கூறி இருப்பது பலர் சொல்லி நாம் அறிந்த உண்மை. 

பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு பேட்டியில் பேசும்போது, எங்கள் அண்ணா பட நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். அந்த பட படப்பிடிப்பின்போது தனக்கு வயிறு முட்ட முட்ட அவர் உணவளித்த விஷயத்தை கூறி நெகிழ்ச்சியடைந்தார். லைட் மேன் முதல் ஹீரோ வரை அனைவருக்கும் ஒரே விதமான உணவு வழங்கி ரசித்த மனிதன் இன்று இல்லை என்று பல திரைக்கலைஞர்கள் வருந்தி வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்
பாக்ஸ் ஆபிஸ் ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 7 மூவீஸ் ஒரு பார்வை