
தமிழ் சினிமாவில், 80பது மற்றும் 90 காலகட்டங்களில்... முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த விஜயகாந்த் அதிரடியாக அரசியலிலும் நுழைந்து, சட்டசபை வரை சென்று எதிர்க்கட்சி தலைவராக மாறியவர். சிறந்த நடிகர், அரசியல்வாதி என்பதை விட சிறந்த மனிதராக அனைவராலும் பார்க்கப்படும் விஜயகாந்த், கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.
இன்று காலை 6.10 மணியளவில், விஜயகாந்த் உயிரிழந்த நிலையில்... பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தொடர்ந்து விஜயகாந்த் மரணத்திற்கு தங்களின் இரங்கல்களை அறிக்கை மூலமாகவும், எக்ஸ் தளத்திலும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரபல இளம் நடிகர் அசோக் செல்வன், ' உங்கள் பெயர் என்றென்றும் வாழும். குட்பை, கேப்டன் என, விஜயகாந்த் புகைப்படத்துடன் கூடிய பதிவை போட்டுள்ளார்.
இயக்குனர் மோகன் ராஜா போட்டுள்ள பதில் 'நீங்கள் யாராலும் ஈடுசெய்ய முடியாதவர் மற்றும் எப்போதும் உங்களை மிஸ் செய்வோம் என கூறி இதயம் நொறுங்கி விட்டதாக எமோஜி போட்டு தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா தன்னுடைய எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவில், RIP கேப்டன், பிரேமலதா மேடம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிறைய அன்பும் வலிமையும் கிடைக்கட்டும். உங்கள் அன்பை நான் என்றென்றும் நினைவில் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
RRR பட நாயகன் ஜூனியர் NTR போட்டுள்ள பதிவில், "விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரு உண்மையான அதிகார மையமாக விளங்கினார். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும். எனது எண்ணங்கள் எப்போதும் அவருடைய குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இருக்கும் என கூறியுள்ளார்".
நடிகர் சத்யராஜ் மகனும், நடிகருமான சிபிராஜ்... விஜயகாந்த் மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் போட்டுள்ளதாவது, "ஒரு அற்புதமான நடிகர், ஒரு துணிச்சலான அரசியல்வாதி மற்றும் ஒரு உண்மையான மாஸ் ஹீரோ ரீல் மற்றும் நிஜ வாழ்க்கை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு அற்புதமான ஆத்மா இப்போது இல்லை! RIP எங்கள் அன்புக்குரிய # கேப்டன் விஜயகாந்த் சார். நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள் என கூறியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி போட்டுள்ள பதிவில், ஒரு சிறந்த மனிதர், அற்புதமான நடிகர், அற்புதமான ஆன்மா எங்கள் கேப்டன் விஜயகாந்த் சார். சினிமாவில் உங்களை யாராலும் ஈடு செய்ய முடியாது. உங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை ஸ்ரேயா ரெட்டி , விஜயகாந்த் மறைவுக்கு தன்னுடைய எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்து போட்டுள்ள பதிவில், 'உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். உங்களை யாராலும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் ரவி தேஜா போட்டுள்ள பதிவில், "விஜயகாந்த் காருவின் மறைவு அறிந்து வருந்துகிறேன், அவரின் தாக்கம் நிறைந்த வாழ்க்கையின் நினைவுகளில் அவரது குடும்பத்தினர் ஆறுதல் அடையட்டும். என தெரிவித்துள்ளார்.
விஜயகாந்துடன் பல படங்களில் நடித்துள்ள, ரோஜா செல்வமணி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவில், "தமிழ் திரையுலகின் ஜாம்பவான் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள், பொன்னான இதயம் கொண்ட மனிதருக்கும், அவரது தெய்வீக ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.