“அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே..” சில படங்களுக்கு சம்பளமே வாங்காமல் நடித்த விஜயகாந்த்..!

By Ramya sFirst Published Dec 28, 2023, 12:53 PM IST
Highlights

மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தையும், புகழையும் அடைந்த பிறகும், அதிக சம்பளத்துக்கு  பேராசைப்படாத ஒரே நடிகர் விஜய்காந்த் தான் என்று கூறப்படுகிறது.

150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக தடம் பதித்தவர் கேப்டன் விஜயகாந்த். ரஜினி ,கமல் உச்சத்தில் இருந்த போது தொடர் வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர். திரை வாழ்க்கை முழுவதுமே தமிழ் படங்களில் மட்டுமே நடித்த வெகு சில நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். சட்டம் ஒரு இருட்டறை, அம்மன் கோயில் கிழக்காலே, உழவன் மகன், புலன் விசாரணை, நானே ராஜா, நானே மந்திரி, பூந்தோட்ட காவல்காரன், ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், வைதேகி காத்திருந்தாள் என பல வெற்றி நடித்துள்ளார்.

1984-ம் ஆண்டில் மட்டும் 18 படங்களில் நடித்து விஜயகாந்த் சாதனை படைத்துள்ளார். வேறு எந்த நடிகரும் ஒரே இவ்வுளவு படங்களில் நடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. சம்பளம் பற்றி கவலைப்படாத ஒரே நடிகர் என்றால் அது விஜயகாந்த் தானாம். அவர் சில படங்களில் சம்பளம் வாங்காமலே நடித்து கொடுத்துள்ளாராம்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தையும், புகழையும் அடைந்த பிறகும், அதிக சம்பளத்துக்கு  பேராசைப்படாத ஒரே நடிகர் விஜய்காந்த் தான் என்று கூறப்படுகிறது. சில நேரங்களில் தனது சம்பளத்தை தாமதமாகவே விஜயகாந்த் பெறுவாராம். படம் வெற்றி பெற்ற பிறகு மட்டுமே தனது சம்பளத்தை பெறுவாராம். சில படங்கள் சரியாக வசூல் செய்யவில்லை என்றால் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வாராம்.. தனது நெருங்கிய நண்பர்கள் இயக்கிய அல்லது நடித்த சில படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்களுக்கு அவர் சம்பளம் வாங்காமலேயே நடித்துக் கொடுத்துள்ளாராம்.

தமிழ் சினிமாவில் அதிக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான். பல புதுமுக இயக்குநர்களுக்கும் வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த், மன்சூர் அலிகான், சரத்குமார், அருண் பாண்டியன் போன்ற நடிகர்களையும் அறிமுகம் செய்தவர். கடின உழைப்பாளியாக இருந்த விஜயகாந்த் ஒரு நாளில் 3 ஷிப்ட்களில் வேலை செய்துள்ளாரம். இவரால் ஒருமுறை கூட ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டதில்லையாம்.

 

கேப்டனின் ரசிகை டூ தேமுதிக பொதுச்செயலாளர்... யார் இந்த பிரேமலதா விஜயகாந்த்? அவர் கடந்து வந்த பாதை

தற்போது 71 வயதாகும் விஜயகாந்த் நிமோனியா காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரின் மறைவு தமிழ் திரையுலகில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று திரையுலகினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

click me!