MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த விஜயகாந்த் டாப் 15 டக்கரான திரைப்படங்கள் - லிஸ்ட் இதோ

திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த விஜயகாந்த் டாப் 15 டக்கரான திரைப்படங்கள் - லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிநாயகனாக வலம் வந்த விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Dec 28 2023, 02:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகர் விஜயகாந்தின் தமிழ் சினிமாவில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதில் அவருக்கு முதன்முதலில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது கடந்த 1984-ம் ஆண்டு ரிலீஸ் ஆன வைதேகி காத்திருந்தாள் படம் தான். இப்படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 

25

இதையடுத்து 1986-ம் ஆண்டு ஊமை விழிகள், அம்மன் கோவில் கிழக்காலே என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார் விஜயகாந்த். இதில் ஊமை விழிகள் 200 நாட்களும், அம்மன் கோவில் கிழக்காலே 175 நாட்களும் ஓடி சாதனை படைத்தன. 1988-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் செந்தூரப்பூவே, பூந்தோட்ட காவல்காரன் என இரண்டு வெற்றிப்படங்கள் வந்தன.

இதையும் படியுங்கள்...ரோஜா, த்ரிஷா, ஜூனியர் NTR உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்..!

35

இதில் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம் திரையரங்குகளில் 180 நாட்களும், செந்தூரப்பூவே திரைப்படம் 186 நாட்களும் ஓடியது. இதற்கு அடுத்த ஆண்டு கேப்டன் நடிப்பில் வெளிவந்த பாட்டுக்கு ஒரு தலைவன் திரைப்படம் 175 நாட்கள் வெற்றிநடைபோட்டது. பின்னர் 1990-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் புலன் விசாரணை என்கிற ஆக்‌ஷன் படம் வெளியாகி 220 நாட்கள் ஓடியது.

இதையடுத்து 1991-ம் ஆண்டு மாநகர காவல், கேப்டன் பிரபாகரன் என இரண்டு மாஸ்டர் பீஸ் படங்களில் நடித்தார் விஜயகாந்த். இந்த இரண்டு படங்களிலுமே அவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இதில் மாநகர காவல் திரைப்படம் 230 நாட்கள் ஓடியது. அதேபோல் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இது விஜயகாந்தின் 100-வது படமாகும்.

45

1992-ம் ஆண்டு விஜயகாந்தின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. ஏனெனில் அந்த வருடம் தான் அவர் நடித்த சின்ன கவுண்டர் படம் வெளியானது. அவரது சினிமா வாழ்க்கையில் அதிக நாட்கள் தியேட்டரில் ஓடிய படம் இது தான். இப்படம் 315 நட்கள் ஓடியது. இதையடுத்து விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1994-ம் ஆண்டு சேதுபதி ஐபிஎஸ் மற்றும் என் ஆசை மச்சான் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின.

55

இதில் என் ஆசை மச்சான் திரைப்படம் 175 நாட்களும், சேதுபதி ஐபிஎஸ் 150 நாட்களும் ஓடின. பின்னர் 6 ஆண்டுகள் பெரியளவில் வெற்றிப்படங்களை கொடுக்காமல் இருந்த கேப்டனுக்கு 2000-ம் ஆண்டு வல்லரசு மற்றும் வானத்தைப்போல என டபுள் ஹிட் கிடைத்தது. இதில் வானத்தைப்போல 175 நாட்களும், வல்லரசு திரைப்படம் 112 நாட்களும் ஓடியது. விஜயகாந்தின் கடைசி ஹிட் படம் என்றால் அது ரமணா தான். 2002ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் 150 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இதையும் படியுங்கள்... பாரி வள்ளல் போல் ஏழைகளுக்கு வாரி வழங்கும் தங்கமான மனுஷன்... விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved